ஆவியானவரின் வெளிப்படுத்துதல் THE MANIFESTATION OF THE SPIRIT 51-07-17 1. மாலை வணக்கம் நண்பர்களே இந்த முதல் இரவு டோலிடோவில் என்னை சந்திப்பதற்கு உச்சகட்ட மகிழ்ச்சி எந்த அளவில் உங்களுக்கு உள்ளதோ அதே அளவு மகிழ்ச்சி எனக்கும் உள்ளது. இது நம் எல்லோருக்கும் ஒரு மகத்தான நேரமாக இருக்கும் என்று நம்புகிறேன்; தேவன் கிருபையால் நம் இருதயத்தில் ஒரு எழுப்புதலை உண்டாக்கி மற்றும் அவருடைய வல்லமையை அவர் மக்கள் மத்தியில் மறுபடியுமாக அறியப்படுத்தும்படியாகவும் இருக்கும். கடந்த வருடத்தில் கிளீவ்லேண்டில் இருந்தேன் அப்போதிலிருந்து இச்சமயத்திற்காக நான் ஆவலோடு இருந்தேன். அவ்விடத்தில் டோலிடோ பற்றி சொன்னார்கள் மற்றும் இது தான் முதன் முறையாக இந்த நகரத்திற்கு நான் வருவது. இங்கு வேறு ஒரு சமயத்தில் செல்லலாம் என்று சொன்னார்கள் மற்றும் சகோதரர் பாக்ஸ்டர் இங்கு நான் செல்லப்போவதாக சொன்னபோது இங்கு வந்து புதிய நண்பர்கள் மற்றும் பழைய நண்பர்களை சந்திக்கப்போவதினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் இந்த ஆறு இரவுகளில் இங்கு தரிப்பது உங்களுக்கும் மற்றும் எனக்கும் மகிழ்ச்சி தரும் என்று நம்புகிறேன். ஏற்கனவே இங்கு வருவதற்கே அவ்வாறு இருந்தபடியால், நிச்சயமாக எனக்கு இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். 2. எல்லாவற்றிக்கும் மேல் நம் மத்தியில் இங்கு வரும் ஒவ்வொரு முடவர்களும் மற்றும் வியாதியஸ்தர்களையும் தேவன் சுகமளிப்பார் என்று நம்புகிறேன். அவர் செய்வார் என்று விசுவாசிக்கிறேன். அவர் மீது நாம் விசுவாசம் மட்டும் வைப்போமானால் எல்லா காரியங்களும் வேலை முடிந்ததாக இருக்கும். இப்போது இங்கு வெப்பமாகவும் மற்றும் வியர்வையாகவும் இருப்பதை நான் கவனித்தேன்; ஆனால் காலநிலையை நாம் ஆளுகை செய்யமுடியாது, தேவன் அதைச் செய்கிறார். மேலும் தேவனின் ஊழியத்தில் இருப்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அது மிகவும் குளுமையாக இருந்தாலும் அல்லது மிகவும் வெப்பமாக இருந்தாலும் அது பரவாயில்லை; அவர் இருந்தால் போதும். 3. ஒரு சிறிய நாடகத்தில்... ஒரு பாடல் நாங்கள் பாடுவதுண்டு, "நான் எங்கு சென்றாலும், அவர் அங்கு இருந்தால் எனக்கு அது பரலோகமாக இருக்கும்". மேலும் நான் நினைக்கிறேன்; அந்த வெப்பத்தில் தேவ குமாரர் எரியும் அக்கினி ஜூவாலையின் வெப்பத்துக்குள் அவர் வந்தபோது எபிரேய பிள்ளைகளுக்கு இதுவரை கொண்டதில் இது அவர்களுக்கு மகத்தான கூட்டமாக இருந்திருக்கும். மேலும் அவர்... அவர் எங்கெல்லாம் இருப்பாரோ அது வெப்பமாக இருந்தாலும் அல்லது தானியேல் போல் சிங்க கெபியில் இருந்து திகிலான இடமாயிருந்தாலும் அல்லது எங்கு இருந்தாலும் இயேசு இருக்கிற இடம் பரலோகம். மற்றும் சபை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் எங்கு இரண்டு அல்லது மூன்று பேர் அவர் நாமத்தில் கூடி இருப்பார்களோ அவர்கள் மத்தியில் நான் இருப்பேன் என்று அவர் நமக்கு வாக்களித்து இருக்கிறார். ஆகவே இந்த இரவுப்பொழுது கூட்டத்தில் அது இரண்டாயிரம் பேர் இருக்கலாம் நம் மத்தியில் இருப்பேன் என்ற அவர் வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இப்பொழுது அவரிடத்தில் நமக்கு தயவு கிடைக்குமானால் நான் நம்புகிறேன் அவர் தன்னை தானே பிரத்தியட்சப்படுத்தி மற்றும் அவருடைய இயற்கைக்கு மேன்பட்ட பிரசன்னத்தினால் அவர் இங்கு இருக்கிறார் என்று நமக்கு அறியப்படுத்துவாரென்று; அது ஒருவேளை வேறு பரிமாணத்தில் இருக்கலாம் அது நம்மில் சிலருக்கு வினோதமாக இருக்கும். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவருடைய வல்லமை வரம்பற்றது. அவருடைய பிரசன்னம் எப்போதும் உள்ளது. 4. இப்பொழுது இந்த இரவில் தொடக்க ஆராதனையாக... சரியாக உங்களுக்கு கேட்கிறதா? ஒலிபெருக்கி உங்களுக்கு சத்தத்தை கொடுக்கிறதா? கட்டிடத்தில் பின்னால் இருப்பவர்களுக்கு சத்தம் போகிறதா என்று அவர்களிடத்தில் கேட்கிறேன். பின்புறத்தில் இருப்பவர்களுக்கு சரியாக கேட்கிறதா? கேட்கிறது என்றால் கரங்களை உயர்த்துங்கள். நல்லது சரி. என்னுடைய குரல் வலிமை அந்த அளவுக்கு இல்லாததால் அதை சரி செய்வதற்கு அவர்கள் ஒலிப்பெருக்கியை உயர்த்துகிறார்கள். இருவருக்கும் சேர்த்து உள்ள குரல் வலிமை சகோதரர் பாக்ஸ்டர்க்கு உள்ளது; ஆகவே, அவருக்கு குறைவாக வைத்து மற்றும் எனக்கு சற்று அதிகமாக ஏற்றி வைப்பார்கள். ஆனால் எங்கள் இருவருக்குள் உடல் அளவு வேறுபடுகிறது. 5. இப்போது உங்கள் இருதயத்தில் என்ன தீர்மானிக்கிறீர்களோ அவ்வாறே இந்த கூட்டம் உங்களுக்கு இருக்கும். இந்த ஆறு இரவுகள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கக்கூடும் அல்லது உங்களுக்கு இடையூறாக இருக்கக்கூடும். இந்த இருக்கைகளில் அமர்ந்திருப் பவர்களை விடுவித்து வீதியில் சுதந்திரமாக நடக்க வைக்கும் நேரமாக இருக்கக்கூடும், படுக்கையில் இருப்பவர்களை விடுவிக்கும் கூட்டமாக இருக்கக்கூடும், புற்று நோய், இருதய கோளாறு மற்றும் பின்னால் இருப்பவர்கள் மற்றும் எல்லோருக்கும் ஒரு விடுதலையான நேரமாக இருக்கக்கூடும். இந்த காரியம் எவ்வளவு எளிமையான காரியம் என்பதை நீங்கள் அறியும்படி தேவன் எனக்கு உதவி செய்வாரென்றால், பிறகு நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள். 6. இப்போது நமக்கு பரிச்சயமாக இருக்கும் இந்த வேத வசனத்தை படிக்க விரும்புகிறேன். இது தீர்க்கதரிசியாகிய மோசே மற்றும் பழைய ஏற்பாடு குறித்தது. தேவன் மோசேயிடம் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும்படி சொன்ன காரியம் அதை நாம் 23-ம் அதிகாரத்தில் காணலாம் மற்றும் யாத்திராகமத்தில் 20-ம் வசனத்தில் துவங்கலாம். யாத்திராகமம் 23:20. 20-ம் வசனத்தின் முதல் பத்தியை படிக்கிறேன். வழியில் உன்னைக் காக்கிறதற்கும் நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இதோ நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து அவர் வாக்குக்குச் செவிகொடு, அவரைக் கோபப்படுத்தாதே, உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை, என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில் நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும் உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்கு முன்செல்வார். 7. இப்போது ஒரு நிமிடம் நம் தலைகளை தாழ்த்துவோமாக. எங்கள் பரலோக பிதாவே, இந்த இரவுப்பொழுதில் இன்னுமாக நீங்கள் யேகோவாவாக இருக்கிறீர், ஆதியில் இருந்து அதே பரலோக பிதா இந்த முடிவு காலத்தில் இங்கு இருக்கிறீர் என்பதை அறியும்போதும், எங்கள் இருதயம் தியானிக்கும் போதும், என்றும் மாறாத கிறிஸ்துவாக இருக்கிறீர். மற்றும் மனுகுலத்தின் மேல் நீர் வைத்திருக்கும் தெய்வீக அன்புக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இந்த இரவுப்பொழுதில் எங்கள் இருதயம் இப்பொருள் மேல் தியானிக்கும் போது அது என்னவென்றால் ஒரு நாளில் இரக்கமில்லாமல் தேவனிடத்திலிருந்து நாங்கள் துண்டிக்கப்பட்டு வேற்று ஜனங்களாக்கப்பட்டோம். தேவன் இல்லாமல் கிறிஸ்து இல்லாமல் தேவனிடத்திலிருந்து மற்றும் நீதியிலிருந்து அந்நியாயப் பட்டதை குறித்து யோசிக்கின்றோம். ஆனால் ஏற்றகாலத்தில் எங்களுடைய செய்கை அதனுடன் ஏதுமில்லாமல் கிறிஸ்து அவருடைய அன்பினால் குற்றவாளிகளுக்கு குற்றமற்றவராக மரித்து எல்லாவற்றையும் அறியும்படி தேவனுடைய குமாரர்களாக அந்த ஸ்தானத்திற்கு கொண்டுவந்தார். இன்னுமாக நாம் எவ்வாறு மாறப்போகிறோம் என்று நமக்கு தெரியாது; ஆனால் அவரை நாம் காண்போம் என்று அறிந்திருக்கிறோம். மற்றும் அவரைப் போல் ஒரு மகிமை உள்ள சரீரத்தை பெற்றுக்கொள்வோம். அவர் எவ்வாறு உள்ளாரோ, அவ்வாறே காண்போம்; வியாதியிலிருந்து விடுபட்டு பாவத்திலிருந்து விடுபட்டு, மரணத்திலிருந்தும் விடுபட்டு, ஓ அழிவில்லாத அந்த சரீரத்தை தரித்துக் கொள்ள ஆவியில் நாங்கள் முனகுகிறோம். 8. ஆனால் பிதாவே இந்த ஜீவியத்தின் பயணத்தில் நாங்கள் பயணிக்கும் போது தேவ குமாரனின் இரட்சிக்கும் கிருபையை மற்றவர்கள் அறியும்படி வலதுபுறம் மற்றும் இடதுபுறம் கதறியபடி அவர்களிடத்தில் ஜீவ கயிற்றை வீசுகிறோம். இந்த சரீரத்தில் ஆரோக்கியத்தை வாஞ்சிக்கிறோம். மேலும் அதற்காக ஒரு வழியை வகுத்திருக்கிறீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். மற்றும் அன்புள்ள தேவனே இந்த கூடாரத்தில் வரப்போகிற இரவு கூட்டங்களில் ஒரு வியாதியஸ்தரும், பலவீனரும் இராதபடி அவ்விதத்தில் எங்கள் மத்தியில் நீர் உம்மை பிரத்தியச்சப்படுத்தும்படி நான் ஜெபிக்கிறேன். தேவனே இருண்ட ஆப்பிரிக்காவிற்கு போகும் முன் என் அட்டவணைபடி இரண்டு கூட்டங்கள் உள்ளது மற்றும் கர்த்தாவே இங்கு நான் நேசிக்கும் என் சொந்த தேசத்தில் ஓ பிதாவாகிய தேவனே, உம்முடைய ஆசீர்வாதத்தை இரட்டைத்தனையாக ஊற்றும், அதை அருளும் கர்த்தாவே. 9. மேலும் இந்த இரவுப்பொழுதில் இங்கு முதல் முறையாக நாங்கள் வந்திருக்கிறோம். இந்நகரத்தில் உம்முடைய பரிசுத்த குமாரனின் கரம் இளகிய இரக்கத்தோடு படர்ந்து ஒவ்வொரு வியாதியஸ்தரையும், ஒவ்வொரு பாவியையும் அணைத்து, இரட்சிப்புக்கும் மற்றும் சுகத்திற்கும் உம்மண்டை கொண்டுவரும்படி செய்யட்டும், கர்த்தாவே. இந்த பூமியில் நான் வந்ததுமுதல் என்னை போஷித்த தேவ தூதனானவர், அவர் இந்த இரவுப்பொழுதில் இங்கு இருக்கிறார் மற்றும் இந்த கூட்டத்தில் எந்த குறை இராதபடி கிறிஸ்துவை இந்த கூட்டத்திற்கு பிரத்தியட்சப்படுத்தட்டும். இந்த கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொரு வியாதியையும் மற்றும் நோயையும் ஆதிக்கம் செலுத்தும்படி விசுவாசம் உயர்ந்து இருக்கட்டும். ஒரு பழைய காலத்து எழுப்புதல் உண்டாகி நகரம் முழுவதும் தேசம் முழுவுதும் பரவும் அளவிற்கு இந்த நகரத்தில் இயேசுவின் நாமம் பெரிதாக்கப்படட்டும். நாங்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கும் நீதியுள்ளவரின் வருகைக்கு முன் அதை அருளும் கர்த்தாவே. அன்புள்ள தேவனே, அடுத்து சில நிமிடங்கள் இந்த கூட்டத்துடன் பேச எனக்கு உதவி செய்யும். விசுவாசத்தை ஊக்குவிக்க எனக்கு வார்த்தைகளை தாரும்; இவைகளை உம்முடைய குமாரனாகிய எங்கள் இரட்சகர் இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறேன் ஆமென். 10. என்னுடைய பேச்சு திறன் குறைவு. திருவாளர் பாக்ஸ்டர் அவர் ஒரு பேச்சாளர் ஆனால் முதல் இரவில் எனக்கு எப்போதும் அதிக நேரம் கிடைக்கும் ஏனெனில் அந்நாளில் அலுவல் இல்லாததால் மற்றும் கூட்டங்களில் இருந்து வரும் போது களைத்து சோர்ந்து இருப்பேன். ஆனால் முதல் இரவு கூட்டங்களில் ஆவியின் பிரத்தியட்சமாக்குதலை குறித்து நான் எடுப்பது உண்டு மக்களிடத்தில் தனிப்பட்ட முறையில் அது செல்வதற்காக. மேலும் அதை நான் முயற்சிக்கையில் ஒவ்வொரு முதல் இரவு கூட்டத்தில் எனக்கு உதவி செய்வீர்களா என்று நான் கேட்பேன். இந்த இரவில் இதன் பின்னணி எதைக் குறிக்கிறது என்று மக்கள் அறிந்து கொள்ளும்படி செய்வேன். தெய்வீக சுகத்துடன் மூடநம்பிக்கை காரியங்கள் இணைந்து உள்ளதையும் மற்றும் மதம் என்று இந்நாளில் கிறிஸ்தவ மதம் என்று அழைக்கப்படுவதையும் உங்கள் எல்லோரையும் போல் நானும் அறிந்து இருக்கிறேன். ஆனால், மூட நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பவர் களைக் குறித்து கிறிஸ்தவர்களாகிய உங்களுக்குத் தெரியும். ஆயினும் அது கிறிஸ்துவிடத்தில் இருந்து உங்களைத் பிரித்துவிடாது, கிறிஸ்துவண்டையில் உங்களைக் கிட்டிச் சேர்க்கும். உண்மையான அசலான பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதையும் மற்றும் இந்த போலியான நடவடிக்கைகளை அறியத்தக்கதாக வெளியரங் கமாக்கும். அசலானது இல்லையென்றால் அப்பொழுது இந்த போலியானது நிஜமான காரியமாக இருக்கும். 11. வேற விதத்தில் சொன்னால் ஒரு போலியான அமெரிக்கா டாலர், ஒரு போலியான டாலர் நோட்டை காணும்போது அதை செய்வதற்கு ஒரு அசலான நோட்டு இருக்கவேண்டும். இல்லையெனில் அந்த போலியானது அசலானதாவும் மற்றும் உண்மையானதாகிவிடும். ஆகவே யாரொருவர் கிறிஸ்தவன் என்று தன்னை சொல்லிக்கொண்டு கிறிஸ்தவராக ஜீவிக்காததை நீங்கள் பார்க்கையில் கிறிஸ்தவனாக நடவாமல் கிறிஸ்தவனாக உரிமைகோரி வேறு விதமாக ஜீவிக்கும்போது அப்போது அதன் பின்னாக ஏதோ ஓரிடத்தில் அசலான உண்மையான கிறிஸ்தவன் இருக்கிறான், பாருங்கள். இப்போது தெய்வீக சுகத்தின் காரியத்தில் அநேக காரியங்கள் அதனோடு செய்கிறார்கள். அவைகளை தேவன் செய்வதில்லை. ஆனால் அக்காரியங்களுக்கு பின்னாக ஒரு அசலான உண்மையான தேவனின் தெய்வீக சுகமளிக்கும் ஊற்று திறக்கப்பட்டு இருக்கிறது என்று நிரூபிக்கிறது. இந்த இரவுப் பொழுதில் வெறும் ஆர்வத்தால் நீங்கள் இங்கு இல்லை என்று நான் விசுவாசிக்கிறேன். அப்படியாக இருந்தீர்கள் என்றால் நிச்சயமாக உங்கள் ஆர்வத்தை தேவன் திருப்தி அடையச் செய்வார்; அதை நான் நம்புகிறேன். 12. இப்போது முதல் காரியமாக தெய்வீக சுகத்தை சொல்ல விரும்புகிறேன்; தேவனை பிரதிபலிக்கும் எந்த காரியத்தையும் அணுக வேண்டிய ஒரே வழி சுமுகமாக மற்றும் விவேகமாக மற்றும் தேவனுடைய வார்த்தையின் பேரில் திடமாக இருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறு காரியத்தின் மேல் கட்டப்பட்டிருந்தால் அது பிழையாக இருக்கிறது; அது தவறு; அதனுடன் விளையாடாதீர்கள். மேலும் இந்த இரவுப்பொழுதில் தேவனின் தெய்வீக வார்த்தை இல்லையென்றால் மற்றும் தெய்வீக சித்தம் அவருடைய வார்த்தையில் நிரூபிக்கப்பட முடியவில்லையென்றால் அதனுடன் எந்த சம்பந்தம் நான் வைத்துக் கொள்ளமாட்டேன். மாயமாலக்காரனாகவோ அல்லது வஞ்சிக்கிறவனாகவோ மரிக்கிறதை விட பாவியாக மரிப்பேன்; அதில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறேன், மரித்தபின் வாய்ப்பு இருக்குமானால் அவ்வாறு இல்லை என்று நான் நம்புகிறேன். ஆனாலும் அவ்வாறு இருந்தால் மாயமாலக்காரனாக தேவனை சந்திப்பதைவிட, "தேவனே, நான் உம்மை விசுவாசிக்காமல் தள்ளிப் போட்டேன்", என்று நான் கூறுவதையே விரும்புகிறேன். மாயமாலம் செய்கிறவனை விட நாஸ்திகனாக இருப்பது மேல் என்று வேதாகமம் சொல்லுகிறது என்று நம்புகிறேன். 13. ஆகவே கிறிஸ்துவை நான் நேசிக்கிறேன். மற்றும் அந்நாளில் நான் மறுதலிக்கப்பட்டால்; ஆனால் நான் இரட்சிக்கப்பட்ட நாள் முதல் என் இருதயத்தில் ஒரு காரியம் உள்ளது. இந்த இரவுப்பொழுதில் அவர் எனக்கு முன் தோன்றி இவ்வாறு சொல்வாரென்றால், "பரலோகத்தில் உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, நீ திரும்ப சென்று கீழே இருக்கும் பிசாசின் இடத்திற்கு செல்", என்பாரானால், அவரை நான் நினைவு கூறுவேன். அங்கு இருக்கையில் மற்றும் அவர் எனக்கு எவ்வளவாக இருந்தபடியால் நான் கீழே போவெனென்றால் என் இருதயத்தில் இருக்கும் என் அன்பு அவருக்காக எரியும். வார்த்தையின் ஞானம் குறித்து எனக்கு அந்த அளவுக்கு தெரியாமலிருக்கலாம்; ஆனால் என்னால் விவரிக்க முடியாத அளவு உள்ள அன்பை என் இருதயத்தில் அவர் மீது வைத்திருக்கின்றேன்; என் ஜீவனைகாட்டிலும் அவர் மேலானவர். 14. மேலும் தெய்வீக சுகம் அவர் வார்த்தையின் அடிப்படையில் உள்ளது; மற்றும் தேவன் இராஜாதிபத்தியம் உள்ளவர் என்று நாம் அறிந்திருக்கிறோம். தேவன் எதை நினைத்தாலும் அவர் செய்யக்கூடும் என்று மக்கள் எண்ணுகிறார்கள் தேவனால் எல்லாவற்றையும் அவ்வாறு செய்ய முடியாது. தேவன் அவர் வார்த்தைக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார். தேவனால் பொய் உரைக்க முடியாது என்று வேதாகமம் சொல்கிறது; அவரால் முடியாது. ஆகவே தேவனால் செய்ய முடியாத ஒரு காரியம் இருக்கிறது. மேலும் தேவன் எதையேனும் சொல்லுவாரென்றால் மற்றும் வாக்கு அளிப்பாரென்றால் அந்த வாக்கை தேவன் திரும்ப எடுத்துக் கொள்ளமாட்டார். ஏனெனில் அவர் தேவன் மற்றும் அவர் சுயாதிபத்தியம் கொண்டவர். அவரால் அவர் வாக்கில் இருந்து பின்வாங்க முடியாது. இப்போது எத்தனை பேர் அது உண்மை என்று விசுவாசிக்கிறீர்கள்? ஆகவே இனி வாக்குவாதம் செய்யக்கூடாது. ஏனெனில் என்னால் நிரூபிக்க முடியும், அல்லது எந்த ஒரு சுவிசேஷ ஊழியகாரர்களால் தெய்வீ சுகம் பரிகாரத்தில் உள்ளது என்று நிரூபிக்கக்கூடும். "நம்முடைய மீறுதலுக்காக அவர் காயப்பட்டார் மற்றும் அவரின் தழும்புகளால் நாம் சுகமானோம்", அது சரி தானே; அது ஒரு காரியத்தின் மேல் நிலவரப்படுகிறது. பாவபரிகாரத்தில் இல்லாத பட்சத்தில் தேவனுடைய வார்த்தையில் சொல்லப்பட்டால் அது அவ்வாறே ஆகும். ஏனென்றால் தேவன் தன்னுடைய வார்த்தையின்படி செய்யக் கடமைப்பட்டுள்ளார். தேவன் தன்னுடைய வார்த்தையில் கடமைப்பட்டுள்ளார். 15. வேறு ஒரு நாளில் கலந்துரையாடயில் இதுவரைக்கும் நான் கேட்டதில் ஒரு அழகான விளக்கத்தை சகோதரர் பாக்ஸ்டர் கொடுத்தார். அவர் சொன்னார், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் ஒரு நீதியுள்ள ராஜா இருந்தார் மற்றும் ஒரு அடிமையை அந்த ராஜா மரண தண்டனை கொடுக்க இருந்தார். மேலும் அந்த தேசத்தின் சட்டத்தின்படி இந்த ராஜா அந்த அடிமையை கொல்லவேண்டும். மற்றும் அந்த அடிமை ராஜா முன்பாக பயத்தோடு நடுங்கி கொண்டு நின்று இருந்தான். மேலும் ராஜா சொன்னார் இப்போது, "உன் ஜீவனை நான் எடுக்கும் முன் அல்லது உன்னை கொல்லும் முன் உனக்கு என்ன தேவை இருக்கிறது?”, என்றார். அவன், "ஒரு கோப்பை தண்ணீர் வேண்டும்”, என்றான். மற்றும் ராஜா அவனுக்கு ஒரு கோப்பை தண்ணீர் கொடுத்தார். அவன் நின்று கொண்டு இருந்தான், மிக நடுக்கத்துடன் நின்றபடியால், அதை அவன் வாயின் அருகில் எடுத்து செல்லமுடியவில்லை. எல்லாம் சிந்திக் கொண்டு இருந்தது. ராஜா, "நீ நேராக நில்”, என்றும், "நீ அந்த தண்ணீரை குடிக்கும்வரை உன் ஜீவனை நான் எடுக்கமாட்டேன்", என்றார். மற்றும் அந்த அடிமை அவரை நேராக பார்த்தான். தண்ணீரை கீழே ஊற்றிவிட்டான். இப்போது அந்த ராஜா அவரின் வார்த்தையின்படி அவனை விடுவித்தார். அவன் ஒரு நீதியுள்ள ராஜா. அவன் ஒரு நல்ல மனிதன். மேலும் நல்ல மனிதனை விட தேவன் மேலானவர். அவர் இராஜாதிபத்தியம் உடையவர், மற்றும் அவர் வார்த்தையில் இவ்வாறு சொல்லும்போது, "ஆதலால் நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்று கொள்வோம் என்று விசுவாசியுங்கள்". எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, பாருங்கள், "நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்”. அது சத்தியம். அதில் பின்வாங்க மாட்டார். அது சத்தியம். தேவன் அதை வாக்கு அளித்திருக்கிறார். "நம்முடைய அக்கிரமத்திற்காக அவர் காயப்பட்டர், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்”. அது சத்தியம். 16. இப்போது இவ்வார்த்தையை கேளுங்கள்... இயேசு பாவத்தை எடுத்துப்போட வந்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? சரி வியாதி பாவத்தின் பண்புகள். பாவம் வருவதற்கு முன் வியாதிகளே இல்லை. பாவம் வந்தது அதை தொடர்ந்து வியாதி வந்தது. பாவத்தின் பண்பாக அதை நாம் எல்லோரும் அறிவோம். அது உங்களுடைய பாவங்களாக இருக்காமல் இருக்கலாம். அது நேரடியாக உங்களில் இருந்து அல்லது மறைமுகமாக இருக்கலாம். எங்கிருந்தோ நீங்கள் சுதந்தரித்து இருக்கலாம். பாவம் செய்த உன்னுடைய பூர்வீக மக்களின் பெலவீனத்தால் அது சந்ததி மேல் விழுகிறது; அவர் சொன்னதை போல் ஒவ்வொரு தலைமுறை பெலவீனமாக மற்றும் அறிவுள்ளவராக ஆகிறார்கள், அதற்கு காரணம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பாவத்தில் வந்தது. ஆகவே இயேசு.... உதாரணமாக ஒரு பெரிய சர்ப்பம் இங்கு இருக்குமானால் அல்லது வேறு ஏதோ பெரிய ஒன்று அதன் கரத்தில் என்னை வைத்துக்கொண்டு மற்றும் அதன் கரத்தால் என்னை காயப்படுத்துமானால் இப்போது அந்த மிருகத்தின் கரத்தை நான் வெட்டவேண்டிய அவசியம் இல்லை ஆனால் ஏதோவொன்று அதன் தலையை அடித்து மற்றும் அதன் தலையை கொல்லுமானால் அதை முழுவதுமாக கொன்றுவிடும். மேலும் இயேசு அந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்தபோது பாவத்தை மற்றும் அந்த தன்மைகளை கொன்றார்; சர்ப்பத்தை அதன் தலையை கொன்றார்; அதை விசுவாசிக்கிறீர்களா; இப்போது அது சத்தியம். பிறகு பாவத்திற்கு அவர் பிராயச்சித்தம் செய்திருந்தால், வியாதிக்கும் பிராயச்சித்தம் செய்தார். ஏனெனில் வியாதி இரண்டாம்பட்சம். பாவத்தின் தன்மையாக நம்முடைய வருத்தம் நம்முடைய பிரச்சனைகள் நம்முடைய பயம் மற்றும் எல்லாமும் பாவத்தின் தன்மைகள். 17. இப்போது கல்வாரியில் இயேசு இயேசு மரித்தபோது பாவத்தின் கேள்வியை பிதாவின் முன்னால் தீர்த்தார்; ஏனெனில் நம்முடைய இனத்தான் மீட்பராக நம்முடைய பாவத்திற்குண்டான பரிபூரண பலியாக அவர் இருந்தார்; வேதப்பாட பண்டிதர்களுக்கு நான் பேசுகிற காரியங்களை நன்றாக தெரியும். போவாஸ் போல ரூத்தின் சொத்தை மீட்கப்படுவதற்காக அவன் இனத்தான மீட்பராக வேண்டிய நிலை உண்டானது. மற்றும் பொதுவில் சாட்சி சொல்ல வேண்டியதாயிற்று; மேலும் ரூத் கொண்ட யாவற்றையும் அவனுக்குக்குரியதாயிற்று. ஏனெனில் அவளுடைய உடமைகள் எல்லாவற்றையும் அவன் மீட்டதினால் மற்றும் நகோமியை அவன் மீட்டபோது அதில் ரூத்தும் இருந்தாள். அது புறஜாதி மணவாட்டிக்கு ஒப்பனையாக இருந்தது; ஆயினும் அவன் ஒரு இனத்தான் மீட்பர். இப்போது ஆவியின் ரூபத்தில் இருக்கும் தேவன், மாம்ச சரீரத்தில் திரையிட்டார். அது கிறிஸ்து இயேசுவாகிய அவருடைய குமாரன். மேலும் தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தை அவருடன் ஒப்புரவாக்கினார்; மற்றும் மனுகுலத்திற்கு சொந்தமானார்; அவர் மனுக்குலத்தின் மேல் போட்ட தண்டத்தின் பாடுகளை சுமக்க மற்றும் நம்முடைய சொந்தக்காரராகவும், மீட்பராகவும் ஆனார். வேறுவிதமாக சொல்ல வேண்டுமானால் பிசாசின் அடகு கடையில் வைக்கப்பட்டோம். இயேசு அதன் கிரையத்தை செலுத்தி நம்மை வாங்கி வெளியே கொண்டு வந்தார். பாருங்கள் ஏற்கனவே கிரையம் செலுத்தப்பட்டாயிற்று. இப்போது இயேசு கல்வாரியில் மரித்தபோது தேவனை பொருத்தவரை உலகத்தில் இருக்கும் உங்கள் நீதியின் தகுதியினால் அவர் இரட்சிக்கவில்லை. 18. இப்போது பத்து வருடத்திற்கு முன் அல்லது இரண்டு வருடத்திற்கு முன் அல்லது மூன்று வருடத்திற்கு முன் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. பதினேழு வருடத்திற்கு முன் நான் இரட்சிக்கப்படவில்லை. இரண்டாயிரம் வருஷத்திற்கு முன் நான் இரட்சிக்கப்பட்டேன். ஆனால் அதை நான் என் பதினேழாவது வயதில் ஏற்றுக் கொண்டேன். இப்போது எனக்காக அல்லது உங்களுக்காக மட்டும் இயேசு கீழே வந்து மரிக்கவில்லை. அவர் பாவத்தின் கேள்வியை தீர்த்தார். ஆனால் அதை நாம் ஏற்றுக் கொள்ளும்வரை எந்த நன்மையையும் பெறமுடியாது; அவரை உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்று கொள்ளவேண்டும்; விசுவாசத்தினால் அதை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்; அதை நம்பக் கூடும். இப்போது எபிரெயர் 3:1-ல் வேதாகமம் சொல்லுகிறது, "நம்முடைய அக்கிரமங்களின் அறிக்கைக்கு அவர் தான் பிரதான ஆசாரியராக இருக்கிறார்", மற்றும் அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்து; நமது அறிக்கையின் பேரில் பரிந்துரைக்கிறார். 19. இப்போது நினைவு கொள்ளுங்கள் நீங்கள் எவ்வளவாய் அழுதது அது காரியமல்ல; நீங்கள் எவ்வளவாய் மனந்திரும்பினீர்கள் அது காரியமல்ல; எவ்வளவு சத்தமாய் தேவனிடத்தில் கதறினீர்கள் அது காரியமல்ல; எவ்வளவு உத்தமாக இருந்தீர்கள் அது காரியமல்ல; அவரிடத்தில் வரும்போது எவ்வளவு விசுவாசமாக இருக்கிறீர்கள் அது தான் காரியம். உங்களின் ஜெபத்தின் தகுதியினால் உங்களை இரட்சிக்கவில்லை; உங்கள் விசுவாசத்தின் தகுதியின் அடிப்படையில் தான் உங்களை இரட்சிக்கிறார். விசுவாசத்தினால் நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள். அதுவும் கிருபையின் மூலமாக. இப்போது பலிபீடத்தண்டை வரும்போது நீங்கள் பாவி என்று உணர்ந்து வருகிறீர்கள். மற்றும் உங்கள் பாவத்திற்கு நீங்கள் வருந்துகிறீர்கள்; நீங்கள் செய்ததற்கு நீங்கள் மனதிரும்புகிறீர்கள்; மற்றும் அதே இடத்தில் நீங்கள் தரித்து ஒரு வாரமாக நீங்கள் அழுதுகொண்டு இருக்கலாம், அது உங்களை ஒரு போதும் இரட்சிக்காது. நீங்கள் உங்கள் உள்ளத்தில் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று விசுவாசிக்கும்வரை அது இரட்சிக்கப்படாது. அது சரிதானே. பின்பு அதை அறிக்கை செய்யுங்கள். நீங்கள் அறிக்கையிடாமல் தேவனால் தேவனால் எதுவும் உங்களுக்கு செய்யமுடியாது; அது சரிதானே, ஏனெனில் உங்கள் அறிக்கையின் பெயரில் அவர் பிரதான ஆசாரியராக இருக்கிறார். அவரால் ஒன்றும் செய்ய இயலாது. மனுஷர்கள் முன் நீ அறிக்கையிடு; பிதாவின் முன் நான் உங்களை அறிக்கை செய்வேன், அது சரிதானே? கீழே உனக்கு நான் என்ன செய்தேன் என்று நீ அறிக்கையிடுகையில் அதையே பிதாவிடத்தில் உனக்கு நான் செய்ததை சொல்லுவேன். அவர் பிரதான ஆசாரியன், புரிகிறதா? வாலிபனே? உம்முடைய அறிக்கையின் பேரில் உள்ள பிரதான ஆசாரியர் அவர். இப்போது என்னுடைய அறிக்கையின் பேரில் பரிந்துரைக்க அவர் இருக்கிறார்; மீட்பின் ஆசீர்வாதங்களுக்கு அவர் செய்த எல்லாவற்றையும் அறிக்கையிட எனக்கு உரிமை இருக்கிறது. அது தான் காரியம். மீட்பின் ஆசீர்வாதங்கள் என்ன? "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் வந்தது. அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்", அது சரிதானே? அது ஒவ்வொரு விசுவாசியின் உடைமை. அது என்னுடையது. 20. என் பயணத்தில் நான் எதை காண்கிறேன் தெரியுமா? இதை நான் தாழ்மையுடன் சொல்லுகிறேன் இரண்டு வகையான மக்கள் ஒன்று அடிப்படையானவைகளை கொண்டவர்கள், இன்னொன்று முழு சுவிசேஷம் இரண்டும் அருமையான மக்கள். ஆனால் இது தான் பிரச்சனை அடிப்படையானவர்களுக்கு கிறிஸ்துவுக்குள் அவர்கள் நிலை என்ன என்று அறிந்து இருக்கிறார்கள். ஆனால் அதை பயிற்சிக்க போதுமான விசுவாசம் இல்லை. முழு சுவிசேஷ மக்களுக்கு விசுவாசம் அதிகமாக உள்ளது. ஆனால் அவர்கள் நிலையை அறிவதில்லை. அது சரிதான். உதாரணமாக ஒரு மனுஷனுக்கு அதிகமான பணம் வங்கியில் உள்ளது. ஆனால் காசோலை எழுத அவனுக்கு தெரியாது. மற்றும் வேறு ஒருவனுக்கு பணமே வங்கியில் இல்லை. ஆனால் காசோலை எழுதத் தெரியும். அவர்கள் இருவரையும் ஒன்றாக என்னால் இணைக்க முடியுமானால்... தேவனின் குமாரன் மற்றும் குமாரத்தியாக நீங்கள் இருக்கிறீர்கள்; மற்றும் அதற்குரிய முதலீடு கல்வாரியில் செலுத்தப்பட்டாயிற்று. மேலும் உங்கள் கையில் காசோலை புத்தகம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்று நீங்கள் உணர்வீர்கள் என்றால் அதில் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். தேவன் அதைக் கொடுப்பதற்கு வாக்களித்து இருக்கிறார். அது வங்கியில் உள்ளது. கல்வாரியில் அது முதலீடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் இரட்சிப்பு, பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம், உங்கள் கவலைகள், மோசமான பிரச்சனைகள், எல்லாம் போய்விட்டது. மேலும் உங்களில் ஒவ்வொருவரும் பரிபூரணமாக சுகம் அடைய முடியும். ஏனெனில் உங்கள் மீட்பானது தேவனின் முன்னால் மீட்கப்பட்டாயிற்று; மற்றும் உங்கள் அறிக்கையின் பேரில் தேவனின் வலதுபாரசத்தில் அமர்ந்து நமக்காக பரிந்துரைக்கிறார். 21. நான் ஒரு பாப்டிஸ்ட்... ஒரு பெந்தெகோஸ்தே பாப்டிஸ்ட், பரிசுத்தாவியை பெற்றுக் கொண்டபடியால், சில காரியங்கள் என்னை மாற்றியது. ஆனாலும் சகோதரனே அவர் எனக்காக மரித்த எல்லா காரியங்களுக்கும் எனக்கு உரிமை உள்ளது என்று அறியும்போது என்னை உரக்க கத்தச் செய்கிறது. கல்வாரி வங்கியின் முதலீடு பெட்டியில் அதை செலுத்தினார். மற்றும் எனக்கு காசோலையை கொடுத்தார். என்ன வேண்டுமோ அதில் எழுது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு அனுப்பினால் போதும் என்றார். ஓ என்ன அது அருமையாக இருக்கிறது. இப்போது இரட்சிப்பை எப்படி பெற்றுக் கொள்ளுவது. இதை சிறு பிள்ளைக்கு சொல்வது போல் கொண்டுபோகலாம். அப்போது எல்லா விசுவாசிகளும் மற்றும் நீங்கள் எந்த சபையை சார்ந்தாலும் புரியக்கூடும். மற்றும் உங்கள் மேய்ப்பர் அவர் சரியானவராக இருப்பாரானால், அதை அவர் சொல்லுவார். விசுவாசத்தினால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் கிரியையினால் அல்ல விசுவாசத்தால் என்று சொல்லுவார்; இப்போது உங்களை இரட்சித்தார் என்று விசுவாசிக்கிறீர்களா? முதல் காரியமாக இருதயத்தில் வரும்போது நீங்கள் அதை விசுவாசியுங்கள்; பிறகு நீங்கள் எழும்பி அதை அறிக்கையிடுங்கள். இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்; என்னை இரட்சித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன் என்று சொல்லுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று நிரூபிக்க எந்த ஒரு தத்ரூபமான காரியமும் இந்த உலகத்தில் இல்லை; உங்கள் கண்கள் அதே நிறமாக இருக்கிறது; நீங்கள் போட்ட அதே சட்டை வைத்துள்ளீர்; நீங்கள் வெளியே செல்லும்போது அது எல்லாம் ஒன்றுமில்லை என்று உங்கள் பழைய நண்பர்கள் சொல்லுவார்கள்; ஆனால் நீங்கள் ஏதோ ஒரு காரியம் அதில் உள்ளது என்று விசுவாசிக்கிறீர்கள். இப்போது நீங்கள், இவ்வாறு சொல்வீர்களென்றால் இது எவ்வாறு வேலை செய்கிறது என்று நான் பார்க்கப் போகிறேன். உங்கள் சாட்சியை நீங்கள் காத்துக் கொள்ளும்வரை அது வேலை செய்யாது. நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இரட்சிக்கப்பட்டவர்களைப் போல நடந்து கொள்ளுங்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்று சொல்லுகிறீர்கள். மற்றும் இரட்சிக்கப் பட்டவர்களோடு இணைப்பு வைத்துக் கொள்கிறீர்கள். மற்றும் அது இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறது. அது சரி தானே? அதே காரியம் தான் தெய்வீக சுகத்தில் ஏற்படும். நீங்கள் சுகமடைந்தீர்கள் என்று விசுவாசியுங்கள். நீங்கள் சுகமடைந்தது போல் நடந்து கொள்ளுங்கள். நான் சுகமடைந்தேன் என்று சொல்லுங்கள். மேலும் உங்கள் அறிக்கையின் பேரில் அவர் பிரதான ஆசாரியராக இருக்கிறபடியால் அவர் செய்து முடித்தார் என்று நீங்கள் இட்ட எந்த அறிக்கையையும் பிதாவின் முன் அவர் நலமானதாக மாற்றுவார்; அது தான் காரியம். 22. சார்க்கோமாஸ் என்ற புற்று நோயை நான் பார்த்திருக்கிறேன்... மேலும் சகோதர்களே ராஜாக்களும், தேசத்தில் மற்றும் பூமியில் ஆளுகை செய்பவர்களும் மத வெறியர்களை ஏற்க மாட்டார்கள் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் நான் இங்கு நிற்பதைப் போல் அது சத்தியம்; இது தேவனின் நித்திய சத்தியம்; நீங்கள் விசுவாசிக்கும் போது உங்கள் விசுவாசத்தின் படி நடந்து கொள்ளுங்கள்; தேவன் அதைச் செய்து முடிப்பார். இப்போது எந்த மக்களும்... இவ்வாறு சொல்லுகிறார்கள், உங்கள் மேல் கரம் வைத்து மற்றும் உங்களுக்கு சுகமளிக்க என் கரங்களில் எனக்கு வல்லமை உள்ளது" என்று, இப்போது யாராவது ஒருவர் சொல்லுவார்களென்றால், அந்த நபர் பொய் சொல்லுகிறார் என்று உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உலகில் யாராலும் எவரையும் சுகமளிக்க முடியாது. சுகம் சர்வ வல்லமையுள்ள தேவனிடத்திலிருந்து வருகிறது. இயேசு கிறிஸ்து கூட தன்னை சுகமளிக்கிறவர் என்று கூறவில்லை. இக்கிரியைகளை நான் செய்வதில்லை, "என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார்", என்றார். இப்போது தேவ குமாரனே தன்னை தெய்வீக சுகமளிக்கிறவர் என்று உரிமை கூறாதபோது, மனுஷன் எம்மாத்திரம். கிறிஸ்து ஏற்கனவே செய்த காரியத்தை எந்த மனிதனாலும் செய்ய முடியாது. 23. எந்த மனிதனாலும் உங்களை இரட்சிக்க முடியாது. எவ்வளவாக அவர் உங்களுக்கு ஜெபித்தாலும், விசுவாசத்தினால் மட்டுமே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள். எந்த மனிதனாலும் உங்களுக்கு சுகத்தை கொடுக்க முடியாது. விசுவாசத்தினால் மாத்திரமே நீங்கள் சுகத்தை பெற்றுக் கொள்கிறீர்கள். இப்போது நீங்கள் வார்த்தையை வாசிக்க அதற்கு பிரசங்கி இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; அங்கே தரித்து, அந்த வார்த்தையை வாசித்து விசுவாசியுங்கள் தேவன் அன்பாய் இருக்கிறார்; பிரசங்கிகளை அனுப்புகிறார்; பிரசங்கிகளை அபிஷேகிக்கிறார்; அவர்கள் வார்த்தையை பிரசங்கிக்கிறார்கள். வார்த்தை வெளிப் பாட்டினால் ஆவியானவரின் ஞானஸ்நானத்தைப் பிரசங்கிக்கிறார்கள். மறுபடியுமாக பிறத்தல் பற்றிச் சொல்கிறார்கள்; மற்றும் நீங்கள் விசுவாசத்தினால் அதை ஏற்றுக்கொண்டு, மற்றும் மறுபடியுமாக பிறத்தலை பெற்று கொள்கிறீர்கள். அது சரி தானே? இப்போது நீங்கள் தெய்வீக சுகத்தை விசுவாசியுங்கள். ஆயினும் தெய்வீக சுகத்தை நீங்கள் விசுவாசிக்கவில்லையென்றால் பிறகு தேவன் தெய்வீக சுகத்தை பிரசங்கிக்க ஊழியக்காரர்களை அனுப்புகிறார். நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு அதை விசுவாசித்து மற்றும் சுகமடையுங்கள். 24. இப்போது அநேக வருஷங்களாக இந்த கிரியைகள் போய்க் கொண்டு இருப்பதால் தேவன் அவரின் இரக்கத்தினால் மேலும் நமக்கு ஒரு காரியத்தை செய்திருக்கிறார், அது மகிமையில் இருந்து அவருடைய தூதனை அனுப்பி தேவனின் தீர்க்கதரிசன வரத்தை அவருடைய மக்களிடத்தில் பிரத்தியச்சமாகும்படி செய்தார். அது மட்டுமே உங்கள் விசுவாசத்தை, சுகத்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு உயர்த்தும் அல்லது இயேசு கிறிஸ்துவிடத்திலிருந்து சுகத்தை ஏற்றுக்கொள்ளும்படி கொண்டுவரும். இப்போது அநேகருக்கு தெரியும்... கர்த்தரின் தூதன் எனக்கு முன்பாக தோன்றியது குறித்து எத்தனை பேர் கேள்விப்பட்டீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள் இங்கு இருப்பவர்களில் பாதிப்பேருக்கு தெரிகிறது. இப்போது அன்பான கிறிஸ்துவ நண்பர்களே இந்த வரிசையை ஆரம்பிக்கும் முன் எல்லோரும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள், நான் ஒரு சுகமளிக்கிறவர் என்று உரிமை கூறவில்லை என்னுடைய அன்பான சகோதரர் மற்றும் சகோதரிகளே உங்களுக்கு ஜெபிக்கிறதைத் தவிர என்னால் ஒன்றும் உங்களுக்கு செய்ய இயலாது. மேலும் எந்த ஒரு மனிதனாலும் உங்களுக்கு சுகமளிக்கமுடியாது; சுகம் தேவனிடத்தில் மாத்திரமே உள்ளது. எத்தனை பேருக்கு அது தெரியும்? சுகமளித்தல் தேவனிடத்தில் மாத்திரமே உள்ளது. மற்றும் அதை தேவனின் வார்த்தையின்படி சொல்லுகிறேன். எப்போதுமே புட்டிங் (சாப்பிடக்கூடிய பண்டம்) சாப்பிட்டால் மட்டுமே அதற்கு சாட்சியாக இருக்கமுடியும். அநேகர் சுகத்தை பெற்று இருக்கிறார்கள். இந்த கடந்த சில வருடங்களில் தத்ரூபமாக லட்சக்கணக்கான மக்கள் சுகமடைந்திருக்கிறார்கள். 25. இப்போது வரங்களும் மற்றும் அழைப்பும் மனந்திரும்புதல் இல்லாமல் கொடுக்கப்படுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் அதை நம்புகிறீர்களா? அது சத்தியம். எல்லோரும் முன்குறிக்கப்பட்டார்கள் என்று நான் விசுவாசிக்கவில்லை; ஆனால் சில காரியங்கள் நடக்கும்படி தேவன் முன்குறித்து இருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்; மற்றும் அது அவ்வாறே இருக்கும். தேவ கிருபை உள்ளது என்பதை நான் விசுவாசிப்பதைப் போல. கடைசி நாட்களில் கரை திரை அற்ற ஒரு சபை இருக்கும். மற்றும் தேவனுக்கு முன் அது நித்தியமாக பாதுகாக்கப்பட்ட சபையாக இருக்கும். ஆனால் அதில் யார் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியாது; நான் மற்றும் நீங்களும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் அது எனக்கு தெரியாது. விசுவாசத்தினால் நான் ஜீவிக்கிறேன். பாருங்கள் ஆனால் ஒரு சபை இருக்கும் என்று விசுவாசிக்கிறேன்; கரை திரை இல்லாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கும். அதன் அங்கத்தினர்கள் எவர்கள் என்று எனக்கு தெரியாது ஆயினும் வேத வசனத்தின்படி மறுபடியும் பிறந்தவர்கள் எல்லோரும் அதில் இருப்பார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். 26. இப்போது சுகம்... இந்த காரியத்திற்காக கென்டக்கி மாகாணத்தில் மலைப் பகுதியில் ஒரு பழைய மர வீட்டில் பிறந்தேன். அங்கு பின்னால் வைக்கப்பட்டுள்ள என்னுடைய புத்தகத்தில் உள்ளது. அவை உங்களுக்கு தேவைபடுமானால் நீங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பாருங்கள் அதில் காரியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் நான் சொல்லிக்கொண்டு இருந்ததுபோல் என்னுடைய பெற்றோர்கள் மிகவும் ஏழ்மையிலும் கத்தோலிக்கவர்களாகவும் இருந்தார்கள். இரண்டு பேரின் வம்ச வழியிலும் நான் ஐரிஷ்ராக இருக்கிறேன். என் அம்மாவுடைய பட்டப் பெயர் ஹார்வே மற்றும் என் அப்பாவின் பட்டப் பெயர் பிரான்ஹாம். ரத்த வம்சாவழி எப்போது மாறியதென்றால் என்னுடைய தாத்தா ஒரு ஓக்லாஹோமா செவ்விந்தியளை திருமணம் செய்தபோது அது சிறிதாக அந்த வம்ச வழியை உடைத்தது; அதனால் இரத்தத்தில் செவ்விந்திய நிறம் வந்தது. இப்போது... ஏப்ரல் 6-ம் தேதி 1909 சுமார் 5 மணிக்கு காலையில் நான் பிறந்தபோது... ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தோம். அதன் புகைப்படம் புத்தகத்தில் உள்ளது. நீங்கள் வசிக்கும் அருமையான வீட்டில் உள்ள ஜன்னல்கள் போல் எங்களுக்கு கிடையாது. ஒரு சிறிய முன்னும் பின்னும் செல்லும் கதவு இருந்தது. அது ஒரு ஜன்னலை போல் தள்ளுகிற கதவு; இந்த தேசத்தில் அவ்வாறு நீங்கள் கண்டு இருப்பீர்களா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு முன்னும் பின்னும் தள்ளப்படுகிற கதவு ஜன்னலைப் போன்றது. 27. வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தமாக அவன் இருந்தான் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? எரேமியாவிடத்தில் தேவன் சொன்னார், "நீ உன் தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன் நான் உன்னை அறிந்தேன் உன்னை சுத்திகரித்தேன் தேசங்களுக்கு தீர்க்கதரிசியாக நியமித்தேன்”. அவன் தாயின் கருவில் இருந்து வருமுன்னே அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியென்றால் முன்குறித்தலை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் பாருங்கள். அது கிருபை நீங்கள் தேர்வு செய்வதினால் அல்ல தேவனின் கிருபையினால். இப்போது இதை உங்களுக்கு நான் போதிக்கவும்; மற்றும் அதை நீங்கள் உண்மை என்று அறியும்படிக்கு இருக்கும் ஒரே வழி அது வேத வசனத்தின் மூலமாக மட்டுமே செய்யக்கூடும். என்ன என்பது எனக்கு தெரியாது. பின்பு அது நடப்பதற்கு அநேக மாதங்களுக்கு முன் காரியங்களை எனக்கு வெளிப்படுத்தி சொல்லப்படும். காரியங்களை (இந்த பட்டணத்துக்கு அருகே இருக்கும் ஜெபர்சன்வில்லின் மக்கள் ஒருவேளை இங்கு அமர்ந்து இருக்கக்கூடும்) மேடையில் இருக்கும் என்னுடைய மேலாளர்... அக்காரியங்கள் நடப்பதற்கு அநேக வாரங்கள் முன் அதை நீங்கள் இங்கு அமர்ந்து இருப்பதை நான் பார்ப்பது போல் நான் காண்பேன். பாப்டிஸ்ட் ஊழியக்காரனாக நான் இருந்தபடியால் அதைக் குறித்து என் மதகுருமார்கள் மூப்பர்கள் மற்றும் பலரிடம் சொல்லுவேன். அதை விட்டு விலகி இரு பில்லி. அதனோடு எதுவும் வைத்துக்கொள்ளாதே. அவைகள் பல நூற்றாண்டுக்கு முன் உள்ள காரியங்கள். நாம் வேறு ஒரு காலத்தில் ஜீவிக்கின்றோம் அவ்வாறே சொல்வார்கள். 28. அவ்வாறே காரியங்கள் நடந்துகொண்டே இருந்தது மற்றும் அதிகமானது. எனக்கு ஒரு சிறிய சபை ஜெபர்சென்வில்லில் உள்ளது. சபையின் மூலமாக எனக்கு வருமான உதவி இல்லை இந்தியானாவில் நான் வேட்டைக்கு பாதுகாவலனாக வேலை செய்தேன் மற்றும் மின்சார கம்பிகளின் பாதுகாவலனாக வேலை செய்தேன் என் ஜீவியம் முழுவதும் நான் வேலை செய்தேன். என் ஜீவியத்தில் ஒருபோதும் நான் காணிக்கை எடுத்ததில்லை. நான் வேலை செய்தேன். ஒரு சபைக்கு மேய்ப்பராக இருந்தேன் அவர்களால் என் தேவையை சந்திக்கமுடியாமல் அல்ல என்னால் வேலை செய்ய முடிந்தது. அப்படி இருக்கையில் நான் ஏன் வேலை செய்யக்கூடாது என்பதினால். அவ்வாறு வருஷங்கள் சென்றன. சில நாட்களில் இந்த கதையை குறித்து உங்களுக்கு சொல்லும்படி பார்க்கிறேன். ஒருவேளை இந்த ஞாயிற்றுக்கிழமை மதியவேளையில் அல்லது எப்போது என்னால் முடியும்போது. இந்த வெப்பமான கட்டிடத்தில் உட்கார வைத்து உங்களுடைய நேரத்தை அதிகமாக எடுக்க விரும்பவில்லை. ஆனால் இதற்கு ஒரு பின்னணி கொடுக்கவேண்டும். ஏனெனில் அப்போது உங்களால் நல்லறிவுடன் அது என்ன என்று புரிந்துகொள்ளமுடியும்.மற்றும் மற்றவர்களிடத்தில் நீங்கள் இதை சொல்லவேண்டும் குற்றம் அல்லது விமர்சனத்தை நீங்கள் கேட்கும்போது அவர்களுக்கு நீங்கள் சொல்லுங்கள் அப்போது அவர்கள் அறிந்து கொள்வார்கள். 29. மேலும் கொஞ்ச நாளுக்கு பிறகு... நான் மனம் திரும்பியபோது அது இன்னும் அதிகமானது. 1937 வெள்ளத்தை கணித்தது. அதை நூற்றுக் கணக்கான மனிதர்கள் தலையை அசைத்து சிரித்து நகைக்க வைத்தது; மற்றும் தெருக்களில் இருபத்தி இரண்டு அடிக்கு தண்ணீர் இருக்கும் என்று கணித்தேன். ஏன் நான் அங்கு நின்று அதை ஒரு தரிசனமாக பார்த்தேன்; அவர்கள் சொன்னார்கள், "அந்த வாலிபன் பைத்தியமானான்" அதன் பின்பு சில வாரங்களுக்கு பிறகு, ஸ்ப்ரிங் சாலையில் ஜெபர்சன்வில்லில், இண்டியானாவில், இருபத்தி இரண்டு அடிக்கு தண்ணீர் சென்றது. அநேக நேரங்களில் எல்லாம் காரியங்கள் அவ்வாறே காண்பிக்கப் பட்டது. பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பெற்றபின் அதை விட இன்னும் அதிகமானது. அதை அந்த அளவுக்கு நான் கவனம் செலுத்தவில்லை. ஒரு நாளில் அதிகமான காரியங்கள் வந்தபோது மக்கள் அதைக் குறித்து மறந்துவிடு என்று என்னிடத்தில் சொன்னார்கள். அப்போது தான் நான் அதை தவிர்க்க முயன்றேன். 30. பிறகு ஒரு சிறிய சிற்றரைக்குள் நான் சென்றேன். ஜெபர்சன்வில் பாப்டிஸ்ட் குழுவில் ஒரு சாரணர் தலைவராக பல வருடம் இருந்தேன்.மேலும் அந்த ஆண்களுக்கு உண்டான சாரண முகாமுக்கு சென்றேன். அங்கு எனக்கு ஒரு சிற்றறை உள்ளது; மற்றும் அங்கு ஜெபம் செய்ய சென்றேன் சில நேரம் இரவெல்லாம் ஜெபிப்பேன். சில நேரம் ஒரு பகலும் மற்றும் இரவும் ஜெபிப்பேன். பிறகு ஓர் இரவு அங்கு ஜெபிக்கையில் சுமார் இரண்டு அல்லது காலை இரண்டு மணியில் இருந்து மூன்று மணிக்குள் இது மறுபடியும் என் முன் தோன்றக்கூடாது என்று தேவனிடத்தில் கேட்டு கொண்டிருக்கையில் மற்றும் இவ்வாறு சொன்னேன் என் ஜீவியத்தில் முதன் முறையாக அதை நான் என்னோடு சேர்த்துக் கொண்டபோது, ஒருவேளை நான் தவறு செய்யக்கூடும். "அது பிசாசின் கிரியைகள்”என்று மக்கள் சொன்னார்கள். அதை நான் தள்ளி போடுகையில் யோசித்தேன்... பாருங்கள் வேதவசனம் என்னிடத்தில் வரவில்லை. ஆனால் இயேசு யூதேயாவில் பிறந்தபோது ஆசாரியர்கள் மற்றும் மத குருக்கள் எவ்வகையான பொத்தான்கள் அவர்கள் சட்டையில் இருக்கவேண்டும் என்று தர்கம் பண்ணிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் வேத சாஸ்திரிகளோ ஒரு நட்சத்திரத்தை பின் தொடர்ந்தார்கள். அந்த நட்சத்திரம் எல்லா ஆராயச்சி மையத்தையும் மற்றும் கோளரங்கத்தையும் கடந்து சென்றது. அந்த மூன்று வான சாஸ்திரிகளைத் தவிர வேறு யாரும் அதை காணவில்லை; அது சரி தானே. சரித்திரத்தில் அதைக் குறித்து எந்த ஒரு பதிவும் இல்லை; விசுவாசிகள் மற்றும் எல்லோரும் எருசலேம் மற்றும் பெத்லகேம் தெருக்களில் நடந்து சென்றார்கள். ஆனால் வான சாஸ்திரிகள் தவிர வேறு யாரும் அதை காணவில்லை; யாக்கோபின் நட்சத்திரம் உதிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கும் வான சாஸ்திரிகளுக்கு அது அனுப்பப்பட்டது. ஆசாரியர்கள் மற்றும் பரிசுத்த புருஷர்கள் ஏன் அதை காணவில்லை. அது அவர்கள் காண்பதற்காக அல்ல. 31. பிறகு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு அவர் வந்தபின் நற் கிரியைகளைச் செய்ய தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டார் என்பதை பார்த்தோம். அவர் பிசாசுகளைத் துரத்துவதைக் கண்டதும் மதகுருக்கள் மற்றும் ஆசாரியர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா, "அவர் ஒரு பெயல்செபூல், என்றும் பிசாசுகளை உடையவன்”அது ஆன்மிகவாதி என்றார். அவர் மக்களின் இருதயத்தில் என்ன இருக்கிறது என்று அவர் பகுத்தறிந்தபோது, "அவர், அவர்களின் எண்ணங்களை படிக்கிறார். அவர் பெயல்செபூல்”, என்றனர். அது உண்மையா? ‘அவர் பெயல்செபூல் மூலமாக பிசாசுகளை துரத்துகிறார், அவர் ஒரு ஆன்மீகவாதி, பிசாசின் அதிபதியாயிருக்கிறார். அவர் பிசாசின் அதிபதியாக இருப்பதினால் அந்த காரியங்களை அவரால் அறிய முடிகிறது”, என்றார்கள். பவுல் மற்றும் பர்னபாஸ் அங்கு வந்த போது... அல்லது பவுல் மற்றும் சீலா வந்த போது அத்தெருவில் அமர்ந்திருந்த குறி சொல்லும் ஒரு வாலிப பெண் அந்த தெருவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள், மற்றும், "நல்லது இவர்கள் உலகத்தை தலைகீழாக்குகிறவர்கள்..." என்று சொன்னார். "அந்த மனிதன் பிசாசு பிடித்தவன், இந்த உலகத்தை தலை கீழாக மாற்றுவார்கள், அவர்கள் வஞ்சகர்கள்”என்று மதகுருக்கள் சொன்னார்கள். ஆனால் அந்த வாலிப குறி சொல்லும் பெண், "இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழிகளை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்", அப்பொழுது பவுல் அவளுக்குள் இருக்கும் அந்த ஆவியை கடிந்து கொண்டான், அது ஒரு குறி சொல்லும் ஆவியாயிருக்கிறது. அது உண்மை தானே? 32. இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அதை அறிந்து கொள்ளும்படி மனிதர்கள் தவறவிடுகிறார்கள், "தேவனே நான் தவறாக சொன்னேனென்றால் என்னை மன்னியுங்கள்”என்று நான் சொன்னேன். 33. நான் தரையின் மேல் ஒரு வெளிச்சம் வந்து கொண்டிருக்கும் வரை ஜெபித்தேன். நான் நிமிர்ந்து பார்த்தபோது அதே வெளிச்சத்தின் சூழல் மேலே இருந்தது. அது மீண்டும் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. ஆனால் என் ஜீவியத்தில் நான் முதன் முறையாக... நூற்றுக்கணக்கான முறை என்னோடு பேசியிருக்கிறது. ஆனால் இப்போது அது நடந்து வருகிறது. யாரோ நடந்து வருவதைக் கேட்டேன். நான் பார்த்தேன். அது எனக்கு பயத்தை உண்டாக்கியது. அவ்வாறு உங்களுக்கும் உண்டாயிருக்கும். அது என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறது, ஆனால் வெறுமனே அது தரிசனம் அல்ல. நான் இயற்கையாக இங்கு இருப்பது போல் அது அப்படியே இருந்தது, இருநூறு பௌண்ட்ஸ் (ஏறக்குறைய தொன்னூறு கிலோ) எடையுள்ள ஒரு மனிதன் என்னிடத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் தன் கரங்களை மடித்து கொண்டிருந்தார். பார்ப்பதற்கு வலுவான மனிதராக இருந்தார், அவருடைய முகம் பார்ப்பதற்கு சமாதானமும் மற்றும் மிகவும் அமைதியான முகத்தைக் கொண்டவராயிருந்தார். அவருடைய முடி கருமையாக அவருடைய தோள்கள் வரை இருந்தது, முகம் மென்மையாக இருந்தது. மேலும் என்னிடத்தில் நடந்து வந்து தயவுள்ளவராக என்னை பார்த்து சொன்னார், "நீ பயப்படாதே", மற்றும் ஓ, அந்த சத்தத்தை நான் கேட்டபோது குடிக்காதே, புகைபிடிக்காதே”, என்று சொன்ன அதே சத்தம் என்று நான் அறிந்து கொண்டேன். அந்த சத்தம் எனக்கு தெரிந்த சத்தமாக இருந்தது. 34. நீர் வியாதியஸ்தர்களுக்கு ஜெபிக்கும்படியாகவும் மற்றும் இந்த சுவிசேஷத்தை உலகத்திற்கு எடுத்து செல்லும்படியாகவும், உன்னுடைய வினோதமான பிறப்பும், ஜீவியமும் அதை குறிக்கிறது, அதை உனக்கு சொல்வதற்காக சர்வ வல்லமை உள்ள தேவனுடைய பிரசன்னத்தில் இருந்து அனுப்பப்பட்டேன். மக்களை உன்னை நம்பும்படியாக நீ செய்தீரென்றால் மற்றும் நீ உத்தமமாய் இருந்தால் உன் ஜெபத்திற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது. மேலும் உலகில் உள்ள எல்லா இடத்திற்கும் நீ செல்வாய். இராஜாக்கள், ஆளுகை செய்பவர்கள் மற்றும் மகத்தான மனிதர்கள் உன்னிடத்தில் ஜெபம் செய்ய வருவார்கள். மற்றும் மகத்தான காரியங்களும் அடையாளங்களும் உன் ஊழியத்தில் இருக்கும் மற்றும் மகத்தான காரியங்கள் நடக்கும் என்று அவர் சொன்னார். "ஐயா நான் சாதாரண கல்வி கற்றவன். நான் என்னுடைய பெற்றோரோடு இருக்கிறேன். மற்றும் நாங்கள் ரொம்ப ஏழையான மக்கள். மேலும் என்னால் பிரசங்கிக்க இயலாது. மற்றும் என்னால் முடியாது... அது என்னால் செய்ய இயலாது. மக்கள் என்னை நம்பமாட்டார்கள். என்னால் சரியாக வார்த்தையை சொல்ல முடியாது. மற்றும் ஏதும் செய்ய முடியாது", என்று நான் சொன்னேன். வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், மக்கள் என்னை நம்பினால்... "நான் உன்னோடு இருப்பேன்", என்று அவர் சொன்னார். "ஆனால் அவர்கள் என்னை நம்பமாட்டார்கள் ஐயா" என்று நான் சொன்னேன். "தீர்க்கதரிசி மோசேயின் அழைப்பை உறுதிப்படுத்தும் படியாக இரண்டு அடையாளங்கள் கொடுத்தது போல் உனக்கும் இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்படும். உன் வாழ்க்கை முழுவதும் நீ பார்த்த இந்த தரிசனங்கள் உனக்கு கொடுக்கப்படும். முதலாவதாக மக்களின் கரங்களை பிடித்ததின் மூலமாக, அந்த மக்களுக்குள் என்ன பிரச்சனை உள்ளது என்றும் அவர்கள் என்ன வியாதியை கொண்டிருக்கிறார்கள் என்றும் அதுவே சொல்லும். நீயாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அதை அவர்கள் விசுவாசிக்க வில்லையென்றாலும் அது நிறைவேறும் அவர்களின் முக்கியமான காரியங்களும் மற்றும் அவர்களின் இருதயத்தின் இரகசியங்களையும் நீ சொல்லுவாய். இதைக் கொண்டு அவர்கள் நம்புவார்கள் என்று அவர் சொன்னார். 35. "இது எங்கிருந்து வருகிறது?" என்று நான் கேட்டேன். உங்களுக்கு புரிந்ததா? நான் அவரை கேள்வி கேட்டேன். "உனக்கு புரியவில்லையா? அது நம் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் மேல் இருந்தது போல..." என்றார். பிலிப்பு நாத்தான்வேலிடம் சென்றபோது, மற்றும் நாத்தான்வேல் அவரிடத்தில் சென்றபோது, விசுவாசிப்பதற்காக அல்ல, "இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்...", என்று அவர் சொன்னார். அந்த வேதவசனத்தை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். மற்றும் நாத்தான்வேல் அவரை நோக்கி, "நீர் என்னை எப்படி அறிவீர் ரபீ?, பிலிப்பு உன்னை அழைக்கும் முன்னே, நீ அத்தி மரத்தின் கீழ் இருக்கும் போது”என்று அவர் சொன்னார். அவன் முகங்குப்புற விழுந்து அவரை ஆராதித்து, "நீர் கிறிஸ்து", என்று சொன்னான். அது மனதின் சிந்தைகளை சொல்லும் காரியங்கள் அல்ல, பிசாசின் அதிபதியினால் கூறும் காரியங்கள் அல்ல. "நீர் கிறிஸ்து, ஜீவிக்கிற தேவனின் குமாரன்”என்றான். 36. கிணற்றண்டை இருந்த ஸ்திரீயினிடத்தில் சிறிது நேரம் பேசினார். மற்றும் அவளுடைய கவனத்தை இழுத்தார். அவர், "உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா" அவளுடைய பிரச்சனைக்கு நேராக சென்றார். "எனக்கு எந்த புருஷனும் இல்லை”, என்று அவள் சொன்னாள். "உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்”என்று அவர் சொன்னார். நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள், அவர் கிறிஸ்துதானே, என்றாள். வாயில் நாணயம் வைத்த மீன், அது எங்கு உள்ளது என்று அவருக்கு தெரியும். அவர் எதையும் செய்வதாக உரிமை கோரவில்லை. பெதஸ்தா குளத்தை அவர் கடந்து சென்றபோது அங்கு முடவர்கள், நடக்க முடியாதவர்கள், குருடர்கள், ஒடுங்கி போனவர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். வேதாகமம் திரளான மக்கள் என்று சொல்லுகிறது. ஒருவேளை சர்க்கரை நீரிழிவு வியாதி உள்ள மனுஷன் இருந்திருக்கக் கூடும். அவனுக்கு இருபத்தி எட்டு வருடமாக (38 வருடமாக) உபாதைகள் உள்ளன. அவன் படுக்கையிலே இருந்தான் என்று இயேசு அறிந்திருந்தார். அந்த ஒரு மனிதனுக்கு சுகம் அளித்து மீதமுள்ள கூட்டத்தை அவ்வாறே இருக்கும்படி விட்டு சென்றார். பரிசுத்த யோவான் 5 அதிகாரம் அல்லவா?. அது சரி தானே. மேலும் யூதர்கள் அவரை கேள்வி கேட்டார்கள் 19-ம் வசனம் அவர் சொல்வதை கவனியுங்கள், "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறது எதுவோ அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” அது சரிதானே? பிறகு இயேசு தாமாகவே எதையும் செய்யவில்லை. தேவன் என்ன செய்தாரோ அதை அவர் ஒரு தரிசனமாக பார்க்கிறார், அதையே இயேசு செய்தார். அது சரிதானே? பரிசுத்த யோவான் 5:19, அதனோடு ஒத்துப்போக அநேக வேத வசனங்கள் உள்ளன. ஆனால் அது சத்தியம். நாம் அதை விசுவாசிக்கிறோம். அவர் தரிசனத்தைக் கண்டார். 37. உதாரணமாக லாசரின் உயிர்த்தெழுதல். "பிதாவே நீர் எனக்குச் செவி கொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்". அந்த நாட்களிலே..., அவனுக்காக ஜெபிக்கும்படி கூப்பிட்ட போது அவர் அதை புறக்கணித்து சென்றார். அவர் சொன்னார், "லாசரு நித்திரை யடைந்தான்..., அவன் மரித்தான். உங்கள் நிமித்தம் நான் அங்கே இராததினால் சந்தோஷப்படுகிறேன். இப்பொழுது நான் அவனை எழுப்பப் போகிறேன்", புரிகிறதா? அது எதை சொல்லுகிறது என்றால் பிதா அவரிடத்தில் என்ன சொன்னார் என்பதை அவர் முன்னமே அறிந்து இருக்கிறார். அவர் தாமே தன் சொந்த வார்த்தைகளில், "பிதா காண்பிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை”என்று அவர் சொன்னார். கர்த்தரின் தூதன் அதை அறிவித்தார், அதை இயேசு கிறிஸ்து சொன்னார், "நான் செய்யும் இக்காரியங்களை நீங்களும் செய்வீர்கள்.”நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பிறகு அவர் எதையும் செய்யவில்லையென்றால், தனக்காக எந்த ஒரு புகழ்ச்சியையும், எதற்கும் எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கு எந்த ஒரு சாட்சியும் கூறமுடியாது. பிதா என்ன காண்பித்தாரோ அதை மட்டும் தான் அவர் செய்தார். அவ்வளவு தான் காரியம். அது அப்படி தானே. 38. பிறகு அந்த ஆவி அவர் மீதாக இருந்தபடியால். அவர் கடந்து சென்றார்,"இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனெனில் நான் உங்களோடு இருப்பேன். இந்த உலகம் முடிவு பரியந்தம் வரை உங்களில் இருப்பேன்" அது சரிதானே? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்... "நான் இதையெல்லாம் செய்தேன் என்று சொல்லுவேனென்றால்", நான் ஒரு பொய்யனாக இருப்பேன். நான் இவைகளை செய்யவில்லை. இயேசு கிறிஸ்து அவருடைய இராஜரீக கிருபையினால் மற்றும் இரக்கத்தின் ஊடாக இவைகளை எனக்கு காண்பிக்கிறார் என்று நான் சொல்லுகிறேன். அவை எனக்காக அல்ல. ஏனெனில் அவை என்னுடைய சுகத்திற்காக அல்ல, உங்களுடைய சுகத்திற்காக. அவர் வார்த்தையை அனுப்பிய பின், ஊழியக்காரர்களை அனுப்பிய பின் இப்போது, தீர்க்கதரிசன வரத்தை அனுப்புகிறார். அவர்கள் அவரை விசுவாசிக்கும்படியாக மக்களின் விசுவாசத்தை உயர்த்துவதற்காக அவருடைய தீர்க்கதரிசன வரத்தை அவர் அனுப்பினார். அது கிருபை இல்லையென்றால், அது இரக்கம் இல்லையென்றால், பிறகு அதை என்ன சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை. 39. இப்போது இந்த இரவுப்பொழுதில்... கவனமாக கேளுங்கள். இன்று இரவு உங்களிடத்தில் நான் வந்து என்னிடத்தில் குற்றவாளி ஜான் டில்லிங்கரின் ஆவி என்னுள் இருக்கிறது என்று சொல்லுவேனென்றால், அந்த ஜான் டில்லிங்கரின் ஆவி என் மேல் இருப்பதினால், என்னிடத்தில் பெரிய துப்பாக்கிகள் கொண்டிருந்து மற்றும் அவரைப் போல் சட்ட விரோதமான காரியங்கள் செய்யும் நபராக நான் இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அவரின் ஆவி என்னுள் இருக்குமானால் அவ்வாறு தான் நான் செய்வேன்.. உங்களுக்கு தெரியுமா தேவன் அவருடைய ஆவியை பூமியிலிருந்து எடுப்பதில்லை. தேவன் அவருடைய மனிதனை எடுத்துக் கொள்வார். ஆனால் அவர் ஆவியை ஒருபோதும் எடுக்கமாட்டார். அது உங்களுக்கு தெரியுமா? பாருங்கள் எலியாவை எடுப்பதற்கு முன்பாக, இரட்டைத்தனையாக எலியாவின் ஆவி, எலிஷா மேல் வந்தது. அது சரிதானே? மேலும் பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பிறகு அவர் யோவான் ஸ்நானகரின் மேல் வந்தார். அது உண்மைதானே? மற்றும் கடைசி நாட்களில் மறுபடியுமாக அதே ஆவி வரும் என்று முன்னதாகவே உரைக்கப்பட்டது. அது சரிதானே. தேவன் தம்முடைய மனிதனை எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவருடைய ஆவியை அல்ல. அவருடைய ஆவி இங்கேயே உள்ளது. ஆவியானது போய்விடும் போது சபையும் சென்றது என்று அர்த்தமாகும். அதன் பிறகு இரட்சிப்பு இனி இல்லை. பரிவு இனி இல்லை, இரக்கம் முடிந்தாயிற்று, ஆவி சென்றுவிட்டது. 40. அப்போஸ்தலர்கள் மீது இருந்த பரிசுத்த ஆவியானவர், அதே பரிசுத்த ஆவியானவர் இந்த இரவுப்பொழுதில் இங்கு இருக்கிறார். தேவன் அவருடைய மனிதனை எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவர் ஆவியை அல்ல. இப்போது பிரசித்தி பெற்ற ஒரு சட்ட விரோதமானவனின் ஆவி என் மேல் இருக்கிறது என்று நான் சொல்லுவேனென்றால் அவனை போல் நடந்து கொள்ளும்படி மற்றும் அவன் மேல் இருந்த அபிஷேகம் என் மேல் இருக்கும்படி நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஒரு பிரசித்தி பெற்ற ஓவியனின் ஆவி எனக்குள் இருக்கிறது என்று உங்களிடத்தில் சொல்லுவேனென்றால் இங்கு இருக்கும் கேன்வாஸ் முழுக்க வரையும்படி எதிர் பார்ப்பீர்கள். மற்றும் அவருடைய ஆவி என் மேல் இருக்குமானால் அந்த பெருங்கடலின் அலைகளையும் ஏரிகளையும் அதை வரைந்து வர்ணம் போட்டு அதன் மேல் நுரை வருவதுபோல் ஒரு பிரசித்தி பெற்ற ஓவியன் போல் எதிர்பார்ப்பீர்கள். நம்மேல் இயேசு கிறிஸ்துவின் ஆவி இருக்கிறது என்று நான் அறிக்கையிடும் போது இயேசு செய்த காரியத்தை நாம் செய்ய வேண்டும். இயேசு சொன்னார், "பிதாவானவர் எதை காண்பிக்கிறாறோ அதை தவிர வேறு ஒன்றும் என்னால் செய்ய முடியாது." கர்த்தரின் தூதனானவர் மோசே முன்னால் தோன்றிய போது... அது மோசே அல்ல அது தேவ தூதனானவர். அவர் தோன்றிய போது அவர் என்னவாக இருந்தார்? அக்கினி ஸ்தம்பமாக, அது சரிதானே? மற்றும் அவர் இஸ்ரவேலர்களை வழிநடத்தினார். அது அந்த உடன்படிக்கையின் தூதன் என்றும் அதுவே கிறிஸ்துவாக இருக்கிறார் என்றும் எந்த வேத பண்டிதனுக்கும் தெரியும். அது சரிதானே? மேலும் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கின்றார். மற்றும் அந்நாளில் சபையை இயற்கையான சரீரத்தில் அவர் வழிநடத்தியது போல, இன்றைக்கும் ஆவிக்குரிய சரீரத்தில் அவர் நம்மை வழிநடத்துகிறார். 41. இந்த இயற்கைக்கு மேன்பட்டவர் (புகைப்படத்தினாலும் மற்றும் அமெரிக்கா புகைப்படக்கார்களின் குழுவின் ஆராய்ச்சியினாலும் மற்றும் எல்லாவற்றையும் அலசி பார்த்து நிரூபிக்கப்பட்டு இன்றிரவு இங்கு தொங்கிக் கொண்டிருக்கிறது... இந்த இயற்கைக்கு மேன்பட்டவரின் புகைப்படம் எடுக்கப்பட்ட ஒரே நேரம் இதுதான். நாங்கள் அதை பின்பாக அறிமுகப்படுத்துகிறோம்) இந்த இரவுப்பொழுதில் நம் மத்தியில் அவர் இருக்கிறார். இப்போது கிறிஸ்தவர்களே மற்றும் நண்பர்களே நான் இவ்வாறு கூறுகிறேன். இந்த இரவுப்பொழுதில், டோலிடோவில் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக அவருடைய தாழ்மையுள்ள ஊழியக்காரனாக உங்களிடத்தில் வருகிறேன். நானாக உங்களுக்கு உதவி செய்வதற்கு, என்னிடத்தில் எதுவும் இல்லை. ஆனால் அவர் இங்கு இருக்கிறார். அவரால் கூடும் மற்றும் காரியங்களை செய்ய விரும்புகிறார். அது அவரை விசுவாசிக்கும்படியாக மற்றும் அவரை ஏற்று கொள்ளும்படியாக உங்களைச் செய்யும். நான் பேசி, மற்றும் நான் எதை கூறினேனோ, அது நிறைவேறவில்லை யென்றால் நீங்கள் என்னை விசுவாசிக்காதீர்கள். ஏனெனில் நான் தவறாக இருக்கக்கூடும். ஆனால் ஒரு காரியத்தை நான் சாட்சியாக சொல்லும்போது மற்றும் நம்முடைய பரலோக பிதா அதற்கு சாட்சியாக இருந்து, மற்றும் அது சத்தியம் என்று உறுதிப்படுத்துவாரென்றால் அப்போது அவரை விசுவாசியுங்கள். அது போதுமானதாக இருக்கும். 42. எந்த ஒரு மனிதனாலும் இங்கு வந்து இது அல்லது அது என்று ஏதாவது சொல்லக்கூடும். நீங்கள் கள்ள சாட்சியாக இருக்க விருப்பப்பட்டால், நீங்கள் விருப்பப்பட்டதை எதையும் நீங்கள் சொல்லலாம். ஆனால் நீங்கள் சொல்லுவதினால் எந்த ஒரு காரியமும் நடக்க போவதில்லை. ஆனால் தேவன் அதை பேசும்போது அது அப்படித்தான் இருக்கும் என்று அதை உறுதிப்படுத்துகிறது. இப்போது இவ்வாறு எழுதப்பட்டு இருக்கிறது, "இரண்டு அல்லது அதுக்குமேல் சாட்சிகளினால் ஒவ்வொரு வார்த்தையும் நிலைவரப்படும்”அது சரிதானே? இப்போது நம்முடைய பரலோக பிதா என் பிறப்பின்போது வெளிப்பட்டார் மற்றும் உங்களுக்கு உதவி செய்யும்படி என்னை அனுப்பினார் என்று இந்த இரவுப்பொழுதில் நான் உங்களிடத்தில் சொன்னேன். மேலும் அவருடைய ஊழியக்காரனாக இந்த இரவுப்பொழுதில் உங்களுக்கு உதவி செய்யும்படி நிற்கிறேன். இது உங்களுடைய வேதபாடத்தில் கற்று கொடுத்தது போல் இராது. மக்கள் நினைப்பதைக் காட்டிலும் பொதுவாக தேவன் அதற்கு மாறான காரியங்களைச் செய்கிறார். அந்த ஆசாரியர்களை பாருங்கள். இயேசு ஒரு மாட்டு தொழுவில் வருவார் என்று அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை. அது ஒட்டுமொத்தமாக... அவர் எப்போதுமே காரியங்களை அப்படித்தான் செய்வார். பிரளய காலத்தின் அழிவில் அவர் அப்படித்தான் செய்தார். என்னுடைய கருத்தில் சகோதர மதகுருமார்களே, இயேசு இரண்டாவது முறை தோன்றும்போது நாம் நினைத்தது போல் அது முற்றிலுமாக முரணாக இருக்கும். ஞானிகளுக்கும் மற்றும் கல்விமான்களின் கண்களில் இருந்து அதை அவர் மறைத்து, சிறு பாலகர்களை போல் கற்று கொள்பவர்களுக்கு அவர் அதை வெளிப்படுத்துவார். அது ஆவிக்குரியரீதியாக புரிந்து கொள்ளப்படுகிறது. இப்போது அந்த நல்ல கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் முழு இருதயத்தோடும் அதற்காக நான் ஜெபிக்கிறேன். 43. சுகம் அளிப்பதற்கு என்னிடத்தில் எந்த ஒரு வழியும் இல்லை. ஆனால் தனி நபர்கள் மேடைக்கு வரும்போது அல்லது கூட்டத்தில் அமர்ந்திருக்கையில்... ஏனெனில் பெரிய குழப்பம் ஏற்படாதபடிக்கு ஒரு ஒழுங்கு முறையில் அதை நடத்த நாங்கள் ஜெப அட்டைகளை தருகிறோம், மற்றும் "நாங்கள் ஏமாற்றப்பட்டோம், எங்களுக்கு வரிசையில் வரும்படியாக ஒரு வாய்ப்பை நீங்கள் எங்களுக்கு தரவில்லை”, என்று மக்கள் சொல்கிறார்கள். ஆகையால் ஒவ்வொரு நாளும் நாங்கள் ஜெப அட்டைகளை கொடுப்போம். நீங்கள் எங்கிருந்தாலும் அழைக்கப்படுவீர்கள்... இந்த இரவில் மக்களாகிய நீங்கள் வரும்படியாக, அந்த அட்டைகளின் ஏதோ ஒரு எண்ணில் இருந்து அழைப்போம். அது தேவை இல்லை. சில பேர்களை மட்டும் இங்கு வரிசையில் நிற்க வைப்போம் அப்பொழுது அவர்களுக்காக நாங்கள் ஜெபிப்போம். மேலும் வேதாகமத்தை என் இருதயத்தின் மேல் வைத்து இதை சொல்லுகிறேன், மக்களாகிய நீங்கள் ஜெப அட்டை இல்லையென்றால் அல்லது ஜெப அட்டை உள்ளவர்கள் அல்லது இல்லாதவர்கள், ஒவ்வொரு இரவும் இந்த கட்டிடத்தில் உள்ள நீங்கள், உங்கள் முழு இருதயத்தோடு நான் சொல்லுவதை சத்தியம் என்று விசுவாசிப்பீர்களென்றால் மற்றும் இயேசு கிறிஸ்துவை உங்களுடைய சுகமளிப்பவர் என்று ஏற்றுக் கொள்வீர்களென்றால், கூட்டத்தின் மத்தியில் உங்களுக்கு என்ன நடந்ததென்று தேவன் எனக்கு காண்பிப்பார். அது உங்களுக்கு போதுமானதாக இருக்குமா? அதை தான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சொல்லுகிறேன் நான் ஒரு பெரியவன் என்று எண்ணிக் கொள்ளவில்லை. உங்கள் மத்தியில் இருப்பதில் நான் தான் சிறியவனாக இருக்கிறேன் என்னை தாழ்த்திக் கொள்ள அவ்வாறு சொல்லவில்லை, இதை நான் என் இருதயத்தில் இருந்து சொல்லுகிறேன். 44. புருஷர்களாகிய உங்களில் பலர் இந்த தெரு முனையில் நின்றுகொண்டு சாப்பிடுவதற்கு ஏதுமில்லாமல், உங்களுக்கு கொடுக்கப்பட்ட சில துணிக்கைகளில் உங்கள் பிள்ளைகளை வளர்த்து இதற்கு வழி வகுக்குகிறீர்கள். உங்களுக்கு ஏதாவது மதிப்பு கொடுக்க வேண்டுமானால் உங்களுக்கு கொடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வழியமைத்ததை நான் அப்படியே பின்தொடர்ந்து வருகிறேன்... ஆகவே சகோதரர்களே தேவனின் வரத்தை தயவுசெய்து இனம்கண்டு கொள்ளுங்கள். அது எனக்கு மட்டும் அல்ல. அது என்னோடு மட்டுமல்ல. அது உங்களிடத்திலும் உள்ளது. அதை பெற்றிருப்பவர்களில் நீங்களும் ஒருவர் தான். அது உங்களுக்குள் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அந்த நோக்கத்திற்காக நான் பிறந்திருக்கலாம். அப்படியாக தான் உள்ளது. ஆனால் ஆசீர்வாதம் உங்களுக்கும், தனி நபருக்கும் ஆகவே அதை விசுவாசியுங்கள். அதை தவற விடாதீர்கள். அந்த வேளை வெகு சீக்கரத்தில் வருகிறது. இப்போது இந்த இரவுப்பொழுதில் நீங்கள்... நமக்கு குறைந்த நேரம் உள்ளது. இதை என்னைப் பற்றி என்று, நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உங்களிடத்தில் நான் சத்தியத்தை சொன்னேன் என்று விசுவாசியுங்கள் பிதாவான தேவனை விசுவாசிக்கிறீர்களா? குமாரனாக இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவரை விசுவாசிக்கிறீர்களா? அற்புதம். அது உங்களை கிறிஸ்தவனாக செய்யும். ஆனால் இந்த தெய்வீக வரங்களின் சலுகையை பெற்றுக் கொள்ள இந்த தூதன்... பெதஸ்தா குளத்தில் இருந்த அதே நபராக இருக்கக் கூடும். எனக்கு தெரியாது. பவுலிடத்தில் இருந்தவர் அதே நபராக இருக்கக்கூடும்... 45. யாரோ ஒருவர் சொன்னார், "புதிய ஏற்பாட்டில் தூதர்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே சபையை வழி நடத்தினார். அது உண்மை. ஆனால் சகோதரரே ஒவ்வொரு காலத்திலும் தூதர்கள் எப்போதும் ஊழியம் செய்யும் ஆவிகளாக இருக்கின்றனர். புதிய ஏற்பாட்டில் தூதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பிலிப்பு குறித்து என்ன? எது அவன் முன்னால் தோன்றியது? வனாந்திர காசாவுக்கு அவனை போகும்படி சொன்னது பரிசுத்த ஆவியானவரா அல்லது கர்த்தரின் தூதனா? கர்த்தரின் தூதன்; அது சரிதானே. பேதுருவுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? யோவான் ஜான் மார்க் வீட்டில் ஜெப கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது, வெளிச்சத்தை போல் ஒன்று பிரகாசித்து மற்றும் அவன் மேல் அது சென்று அவனை தொட்டு அவனுடைய சங்கிலியை விடுவித்து அவனை வெளியே கொண்டு வந்தது, பரிசுத்த ஆவியானவரா அல்லது கர்த்தரின் தூதனா? அது கர்த்தரின் தூ தனே ஆகும். அது சரிதானே? பரிசுத்த பவுலிடத்தில் பரிசுத்த ஆவி இருந்தார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? பெருங்கடலில் பதினான்கு நாட்கள் இரவும் பகலும் நட்சத்திரம் சந்திரன் எதுவும் இல்லாமல் இருந்த, பிறகு அவன் படகின் கீழ் பகுதியில் இருந்து வெளியே வந்தான். அவர்கள் காப்பாற்றப்படுவதற்கு இருந்த எல்லா நம்பிக்கையும் போனது. "ஆனபடியால் மனுஷர், மற்றும் சகோதரர்களே திடமாயிருங்கள் கர்த்தராகிய தூதன் எனக்கு சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும், ஏனென்றால் என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவர் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று சொன்னார். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்” அதை யார் செய்தார்கள் என்று பவுல் சொன்னார்? எனக்கு ஞானம் இருக்கிறது என்று பவுல் சொல்லவில்லை, "ஆனால் நான் சேவிக்கிறவருமான, அந்த கர்த்தரின் தூதனானவர்”என்று பவுல் சொன்னார். 46. திவ்விய வாசகனாகிய யோவானிடத்தில் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என் று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? "இயேசுவாகிய நான் உம்மிடத்தில் இக்காரியங்களை சாட்சியாக பகிரும்படி என் தூதனை அனுப்பியிருக்கிறேன், அது சரிதானே? மேலும் வெளிப்பாடு புத்தகம் முழுவதும் கர்த்தரின் தூதனால் யோவானுக்கு காண்பிக்கப் பட்டது. அது சரிதானே? மற்றும் யோவான் அந்த தூதனை வணங்கும் படி அவன் பாதத்தில் விழுந்தான், அப்பொழுது, "அந்த தூதன், உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், கூட நானும் ஒரு ஊழியக்காரனாய் இருக்கிறேன், (அது சரிதானே) ஆகையால் நீ இவ்வாறு செய்யாதே", என்று சொன்னான். அது சத்தியம் தானே? காலங்கள் ஊடாக தீர்க்கதரிசிகளுக்குள் இருந்த தீர்க்கதரிசன ஆவி இருந்து கொண்டு வருகிறது, அதே ஆவி இங்கே யோவான் மூலமாக தீர்க்கதரிசனம் உரைக்கிறது, அதை ஒரு தூதன் மூலமாக காண்பிக்கப்படுகிறது. மற்றும் அதே ஆவி இந்த இரவுப்பொழுதில் இந்த கட்டிடத்தில் உள்ளது. பழைய ஏற்பாட்டில் இருந்த பிலேயாம் போல் உங்கள் கண்கள் மறைக்கப்பட்டு இருந்தால், அந்த வாய்பேசாத கழுதை கூட, தூதன் வழியில் நின்றாலும் அவனுக்கு தெரியவில்லை; தேவன் இந்த இரவுப்பொழுதில் உங்கள் கண்கள் மேல் இருக்கும் திரையை நீக்குவாராக. மற்றும் தோத்தானில் எலியா, "பயப்படாதே அவர்களோடிருக்கிறவர்களை பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்", இவ்வாறு சொன்னபோது கேயாசியின் கண்களை அவர் திறந்தது போல் நம் கண்களையும் அவர் திறக்கட்டும். கேயாசி சொன்னான், "நாம் இரண்டு பேர் தான் உள்ளோம்", வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நம்மை சுற்றியிருக்கும் அந்த பெலிஸ்திய படைகளைப் பாருங்கள். எலியா சொன்னார், "கர்த்தாவே, அந்த பையனின் கண்களைப் பார்க்கும் படி திறந்தருளும்" என்றான். அப்போது தீர்க்கதரிசியை சுற்றிலும் அக்கினிமயமான இரதங்களாலும் அந்த மலையின் மேல் அக்கினிமயமான குதிரைகளாலும் மற்றும் அக்கினிமயமான தூதர்கள் நின்றிருப்பதை கேயாசி கண்டான்". அது சரிதானே? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். அதைக் குறித்து ஆராயாதே. அதை அப்படியே ஏற்றுக்கொள். 47. தேவனை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் பரிசுத்த ஆவியை நீங்கள் விசுவாசிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். மற்றும் என்னை நீங்கள் நம்பவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது அவைகள் நீங்கள் விசுவாசிக்கலாம், மற்றும் நான் சத்தியத்தை சொன்னேன் என்று நம்பவில்லையென்றால் அப்போது அதில் இருந்து ஒரு பலனும் நீங்கள் அடைய முடியாது. உங்களுக்கு அது தெரியுமா? வைராக்கியமுள்ள தேவன்; தேவனை, விசுவாசித்த அதே மக்கள் இயேசுவைக் கொன்றார்கள். "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்”என்று இயேசு சொன்னார். அவர்கள் தேவனை விசுவாசித்தது போலவே அவர்கள் பிதாவை விசுவாசித்தார்கள். ஆனால் அவர் பிதாவால் அனுப்பப்பட்ட குமாரன் என்று அவர்கள் நம்பவேண்டும். அது சரிதானே? அவர் பிதா அல்ல, ஆனால் பிதாவினிடத்திலிருந்து அனுப்பப்பட்ட குமாரன், நான் பிதாவும் அல்ல, குமாரனும் அல்ல, மற்றும் பரிசுத்த ஆவியும் அல்ல. நான் ஒரு மனிதன். உங்களுடைய சகோதரன். இயற்கைக்கு மேம்பட்ட காரியத்தினால் நிரூபிக்கப்பட்ட ஊழியமாகும். அது நான் அல்ல. உங்களுக்கு அந்த ஊழியத்தின் மூலமாக இந்த ஆசீர்வாதங்கள் உங்களுக்கு அளிப்பதற்காக அந்த கர்த்தராகிய தூதன் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டார். மின்விளக்கு இப்படியாக சொல்லக்கூடுமா, "பாருங்கள், நான் எவ்வளவு மகத்தான மின் கம்பி என்று”, அந்த மின் கம்பி மட்டும் இருந்தால் எந்த பிரயோஜனமும் இல்லை, அந்த மின்கம்பிகளில் இருக்கிற மின்சாரம் அந்த விளக்கு எரியும்படி செய்கிறது, அது அந்த கம்பி அல்ல. அதேபோல் நான் அந்த கம்பியாக இருக்கிறேன். நானாக எந்த வெளிச்சத்தையும் கொடுக்க முடியாது, ஏதோ ஒருகாரியம் மூலமாக அது இயக்கப்படும் வரை விளக்கு எரியாது. இயேசு கிறிஸ்துவுக்கு மற்றும் தேவனுக்கு நான் ஸ்தோத்திரம் செலுத்துவதை நீங்கள் காண்கிறீர்களா? அது என்னால் ஆனதல்ல. அது அவராலானது என்று நீங்கள் விசுவாசியுங்கள். 48. இப்பொழுது ஞாயிறு ஆராதனையின் முடிவில், இருதயத்தின் இரகசியங்கள் வெளிப்படவில்லையென்றால், வியாதியஸ்தர்கள் சுகமடையாமல், குருடர்கள் பார்வையடை யாமல், உங்கள் இரகசியங்கள் வெளிப்படுத்தப் படாமல், மற்றும் உங்கள் வியாதிகள் என்னவென்று சர்வ வல்லமை உள்ள தேவனின் வல்லமை உங்களுடைய வியாதிகளை வெளிப்படுத்தவில்லையென்றால், அப்பொழுது, நீங்கள் சகோதரர் பிரான்ஹாம் ஒரு கள்ள தீர்க்கதரிசி என்று சொல்லலாம். ஆனால் இவையெல்லாம் சத்தியமென்றால் மற்றும் தேவன் அந்த சத்தியத்தை நிரூபணம் செய்வாரென்றால் பிறகு இயேசுவை உங்கள் இரட்சகராகவும் மற்றும் சுகமளிப்பவராகவும் ஏற்றுக்கொண்டு அவருக்கு எல்லா மகிமையும் கனத்தையும் கொடுத்து, போகுமிடமெல்லாம் அவருக்காக ஜீவித்து உங்கள் நாட்கள் முழுவதும் மற்றவர்களிடத்தில் அவர் நல்லவர் என்று சொல்லுங்கள். அதுவே உகந்ததாக இருக்குமல்லவா, தேவன் உங்களோடு இருப்பாராக என்பதே என்னுடைய ஜெபம். 49. சரி நாம் மறுபடியுமாக நம் தலைகளை தாழ்த்துவோமாக, இசை வாசிக்கும் நம் சகோதரர் இசை கருவியிடத்தில் வரும்படியாக கேட்டுக் கொள்கிறேன். "ஓ தேவனே, இந்த கட்டிடத்தில் மிகவும் வெப்பமாக இருக்கிறது. உட்கார்ந்திருக்கும் அந்த அநேக பிரியமான மக்கள் விசிறி கொண்டு இருக்கிறார்கள், இந்த மேடையில் மிகவும் வெப்பமாக இருக்கிறது. அன்பான தேவனே, இப்போது எங்களை நாங்கள் காண்பிக்கும்படியாக நாங்கள் இங்கு இல்லை. உமக்கு அது தெரியும் உம்முடைய ஆராதனை ஒரு விளம்பர பலகை அல்ல, கர்த்தாவே இது ஒரு பொழுதுபோக்கு நாடகம் அல்ல என்று நீர் அறிவீர்; இது இரட்சிப்புக்கு கொண்டு செல்லும்படியாக தேவனுடைய வல்லமையாக இருக்கிறது. கர்த்தருடைய தூதன் என்னை அனுப்பியதன் மூலமாக; அது என்னை நாள் முழுவதும் நடத்தியதன் மூலமாக நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறீர் என்று நான் சொல்லும்படியாக, இந்த இரவில் கர்த்தாவே உமக்காக என்னை பிரதிநிதிபடுத்தும்படியாக இங்கு இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே, நானாகவே இந்த காரியங்களை செய்வதற்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை. அது நீர் மற்றும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட உம்முடைய தெய்வீக இரக்கம். அது எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படியாக எனக்கு தெரிந்த யாவற்றையும் நான் செய்தேன், பிதாவே. இந்த காலத்தினூடாக என்னோடிருந்த அந்த தூதன் இப்பொழுது எனக்கு அருகாமையில் வர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். பிதாவே அநேக வியாதியஸ்தர்கள் இங்கு அமர்ந்து இருக்கிறார்கள். தேவையுள்ள அநேகர் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். நீர் என்னோடு இருப்பீராக, மேலும் உம்முடைய பிள்ளைகள் உம்மை நோக்கி வருவதற்கு உதவியாக இவர்களுடைய காரியங்களை வெளிப்படுத்துவதற்கு, நான் அதை அறிந்து நீர் என்னோடிருந்து எனக்கு உதவி செய்யும்படியாக நான் ஜெபிக்கிறேன். இந்த இரவு கூட்டங்கள் மகத்தானதாக இருக்கும்படி அருளும் தேவனே. இந்த வீதிகள் மக்களால் நிரம்பும்படி மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவிடத்தில் வருவார்களாக, ஒவ்வொரு சக்கர நாற்காலிகளையும் காலியாக விட்டு செல்வார்களாக, ஒவ்வொரு இருதய கோளாறுகளும், ஒவ்வொரு புற்று நோயும் குணமாகட்டும். மகத்தான மகிமை இந்த மக்களுக்குள் இருப்பதாக, ஒவ்வொரு சபையும் மகத்தான எழுப்புதலை பெற்றுக் கொள்ளட்டும். இவையெல்லாம் உம்முடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறேன். ஆமென். 50. என்ன எழுத்தில் இருந்து... முதல் D முதல் எண் ஒன்றா? என்னுடைய மகன் சொன்னான் ஐம்பது அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதென்று. நீங்கள் பெற்று கொண்ட அட்டையின் பின் பகுதியில் பாருங்கள். அதில் D எழுத்து இருக்கும். அந்த அட்டையின் பின்னால் எண்கள் இருக்கும். அந்த அட்டைகள் மேடைக்கு வரும் வரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கு ஏதுவாயிருக்கும். இப்பொழுது D எண் 1 எண் 2... நாம் அழைக்கலாம். எவ்வளவு இடம் அங்கு உள்ளது சகோதரர் பாக்ஸ்டர். அங்கு எத்தனை பேரை நாம் அழைக்கலாம். பத்து அல்லது பதினைந்து எத்தனை பேர்? சரி. முதல் பதினைந்து D 1- முதல் D 15... வரை அட்டைகள் வைத்துள்ள மக்கள் அருகாமையில் அமர்ந்திருப்பவர்கள், அவர்கள் ஒருவேளை காது கேளாதவர்களாய் இருக்கலாம். நீங்கள் அவர்கள் அட்டைகளை பார்த்து சொல்லுங்கள். ஏனெனில் நான் பேசுவது அவர்களுக்கு கேட்காமல் இருக்கக்கூடும். மேலும் உங்கள் எண்ணின் பிரகாரம் இங்கு வரிசையில் நில்லுங்கள். எண்ணின் எண்ணிக்கைபடி 1,2,3,4,5,6 வரை அல்லது D 10 அல்லது D -15 D -1 இருந்து D - 15 வரை இதில் இருந்து நாம் துவங்கலாம். மற்றும் எத்தனை பேருக்கு ஜெபிக்க கூடுமோ நாம் ஜெபிக்கலாம். 51. ஜெப அட்டை வைத்துள்ள மீதியுள்ளோர்... ஜெப அட்டை இல்லாத வியாதியஸ்தர்கள் எத்தனை பேர் இங்கு உள்ளீர்? உங்கள் கரங்களை நான் பார்க்கட்டும்? வியாதியஸ்தர்கள் மற்றும் ஜெப அட்டை இல்லாதவர்களும், எல்லா இடத்திலும், இப்பொழுது சுற்றிலும் உள்ளவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி எனக்கு ஒரு பரஸ்பர யோசனை உள்ளது. அநேகர் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிறீர்கள். முதல் குழு, அங்கு வரிசையில் ஒழுங்குபடுத்துகையில்... நீங்கள் இந்த பக்கம் பாருங்கள், நண்பர்களே. இந்த கட்டிடத்தில் ஒரு நபரையாவது நான் அறிந்திருப்பேனென்றால் அல்லது இனங்கண்டு கொண்டே னென்றால் தேவன் சரியாக இப்பொழுதே எனக்கு நியாயாதிபதியாக இருப்பாராக, நான் அறிந்த ஒரு நபரை கூட என்னால் காணமுடியவில்லை. நீங்கள் எனக்கு அந்நியர்களாக இருக்கிறீர்கள். இங்கு இருப்போரில் யாரையும் எனக்கு தெரியாது. இப்போது இன்னும் சில நிமிடங்களில் வினோதமாக நான் நடந்து கொள்ளுவதை பார்ப்பீர்களென்றால் அதை குறைகூற மாட்டீர் களென்று எனக்கு வாக்கு கொடுங்கள். அது ஒருவேளை... ஏதோ ஒன்று நடக்கிறது, புரிந்ததா? 52. நாங்கள் இங்கு வைத்து இருக்கும் கர்த்தரின் தூதனானவரின் புகைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அநேகர் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? நல்லது நீங்கள் எல்லோரும் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் வேறு கூட்டங்களில் இருந்து இருக்கிறீர்கள், அது கீழே வந்து அபிஷேகிக்கிறது மற்றும் அந்த அபிஷேகத்தில் அது பேசுவதினால், அதன்பிறகு நடக்கும் காரியத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்பொழுது நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால் அது என்ன சொன்னாலும் பரவாயில்லை அதை நீங்கள் செய்யுங்கள், அது என்ன சொல்கிறதோ கச்சிதமாக நீங்கள் அதை அப்படியே செய்யுங்கள், பிறகு பாருங்கள் என்ன நடக்கிறது என்று. எல்லோருக்கும் அது சுகம் கொடுப்பதில்லை. விசுவாசத்தினாலே மட்டும் நீங்கள் சுகம் அடைகிறீர்கள். ஆனால் அதற்குத் தெரியும். அநேக முறை நான் மக்களை காண்பதுண்டு மற்றும் அவர்கள் மரிப்பதை காண்பேன். நேரடியாக நான் வழிநடத்தப்படாமல் எப்பொழுதும் நான் எதையும் சொல்வதில்லை. மக்களை சுற்றி இருள் சூழுந்து இருப்பதை நான் பார்ப்பேனென்றால், அவர்களுக்கு அநேக நாட்கள் இல்லை என்று நான் அறிந்து கொள்வேன். ஆனால் அதை நான் ஒருபோதும் அவர்களிடத்தில் சொல்லுவதில்லை. ஏனெனில் சில நேரத்தில் ஜெபம் காரியங்களை மாற்றும், நாம் அதை உணர்கின்றோம். எசேக்கியா மரிக்கப் போவதாக தீர்க்கதரிசியின் மூலமாக அவனுக்கு சொல்லப்பட்டது. தேவன் அதை சொன்னார் என்று விசுவாசிக் கிறீர்களா? மேலும் எசேக்கியா தன் முகத்தை சுவர்புறமாக திரும்பி கதறி அழுதான். மற்றும் தேவன் அவன் ஜெபத்தை கேட்டு தீர்க்கதரிசியை மறுபடியுமாக அவனிடத்தில் அனுப்பி சொன்னார், அவன் ஜெபத்தை நான் கேட்டு அவனுக்கு பதினைந்து வருடம் கூட்டி கொடுத்தேன் என்றார். அது நிஜம் தானே? 53. ஜெப அட்டை இல்லாதவர்களாகிய நீங்கள் ஒருவேளை இது உங்களுடைய முதல் இரவாக இங்கு இருக்கலாம். அதாவது உங்கள் முதல் கூட்டமாக இருக்கிறதென்று நான் கருதுகிறேன். உங்களுக்கு இதை சொல்லுகிறேன். இந்த இரவுப்பொழுதில் ஜெப அட்டை பெற்றுக் கொள்ளவில்லையென்றால், அதை குறித்து எந்த ஒரு வருத்தமும் தேவையில்லை. நீங்கள் இதை இவ்விதமாக நோக்கிப் பாருங்கள். நான் சொன்னது சத்தியம் என்று உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நான் மக்களை கவனிப்பேன் மற்றும் என்னிடத்தில் ஏதோ ஒரு காரியம் என்னை இழுப்பது போல் நான் உணர ஆரம்பிக்கும் போது மற்றும் தேவன் உங்களை குறித்து ஏதாவது காரியத்தை காண்பிப்பாரென்றால், அதைக் குறித்து உங்களிடத்தில் நான் பேசுவேன் பாருங்கள்... இப்பொழுது உங்களுக்கு... உங்களுக்கு ஜெப அட்டைகள் இல்லை யென்றால் அதைக் குறித்து மறந்துவிடுங்கள். புரிகிறதா? இதை மட்டும் நோக்கிப் பார்த்துக் கொண்டு ஜெபத்துடன் இருங்கள். தேவன் அதை வெளிப்படுத்த போதுமானவராக இருக்கிறார். தேவன் அதை அருள்செய்வாராக. இப்போது எல்லோரும் தங்களால் இயன்ற அளவு பயபக்தியோடு இருக்கும்படி நான் விரும்புகிறேன். 54. மேலும் இப்போது பிள்ளைகளோடு இருக்கும் தாய்மார்களே சில சமயங்களில் குறிப்பாக காக்காய்வலிப்பு பிரச்சனை உள்ளவர்களினால் அதிகமாய் தொல்லை ஏற்படுகிறது. உங்கள் பிள்ளைகளை உங்கள் அருகிலே வைத்துக் கொள்ளுங்கள். மற்றும் உங்கள் தலைகளை தாழ்த்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லும்போது, நீங்கள் அதை அப்படியே செய்யுங்கள். மற்றும் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் இந்த கூட்டத்தை ஆரம்பிக்கும் போது ஏற்படும் எந்த காரியத்திற்கும் நான் பொறுப்பாளி அல்ல என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதை நான் மறுபடியுமாக சொல்லுகிறேன். ஏனெனில் சட்டத்தின்படி ஆராதனை நடக்கும் நேரத்தில் நீங்கள் குறை கூறுவதினால் ஏற்படும் எந்த சம்பவத்திற்கும் நான் பொறுப்பாளியல்ல. அது உங்களுக்கு உறுதியாக இருக்கட்டும், இந்த வல்லமைகள், அது வேறு ஒரு ஆராதனையில் உங்களுக்கு விவரிக்கப்படும். அவைகள் தத்ரூபமாக பிசாசுகள் ஒருவரிடத்தில் இருந்து இன்னொருவரிடத்தில் செல்லும் என்பது எத்தனை பேருக்கு அது உண்மை என்று தெரியும்? நல்லது அது சரி. இங்கு திடமான ஒரு கூட்ட மக்கள் இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். வேதாகமம் நாட்களை நினைவு கொள்ளுங்கள். அந்த ஆவிகளுக்கு ஒரு சரீரம் தேவையாயிருக்கிறது. இல்லைன்ெறால் அவர்கள் அந்த பிசாசின் ஆவியில் வெளியே வர எண்ணினார்கள். அந்த ஆவிகளுக்கு ஒரு சரீரம் இல்லையென்றால் திக்கற்றவர்களாக இருக்கும். அது ஒரு சரீரத்துக்குள் நுழைந்த பின், அதன் பிறகு தான் அவர்கள் தொல்லைக்குள்ளாகிறார்கள். 55. இப்போது வாருங்கள் சீமாட்டியே. மற்றும் எல்லோரும் முடிந்தவரை பயபக்தியோடு இருங்கள். கூட்டத்தினர் இதை கவனிக்கும்படியாக நான் விரும்புகிறேன். அபிஷேகம் வரும்முன் எவ்வளவு பேசமுடியுமோ அவ்வளவு நான் பேச முயற்சிக்கிறேன். பொதுவாக வியாதிப்பட்டவர்கள் இங்கு வரும்போது அவர்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வியாதிபட்டவர்களின் முகத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அபிஷேகம் இறங்கி வரும்போது அவர்கள் முகபாவனை மாறுவதை நீங்கள் கவனியுங்கள். இயற்கைக்கு மேம்பட்டவரின் பிரசன்னத்தில் இருக்கிறோம் என்று அவர்கள் உணர்கிறார்கள். இப்போது மக்கள் வினோதமாக இருக்கிறார்கள். மற்றும் முதல் கூட்ட இரவில் கொஞ்சம் வினோதமாக இருக்கும். ஆனால் என்னோடு நீங்கள் எல்லோரும் ஜெபத்தோடு இருக்கும்படி விரும்புகிறேன். மற்றும் நீங்கள் இருக்கும் இடத்தில் ஜெபித்துக் கொண்டு விசுவாசத்தோடு இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பிறகு உங்கள் விசுவாசமே என்னை இழுக்கும். மற்றும் அது அவ்வாறு செய்யுமானால் நான் தரிசனத்தைக் காண்பேன். பிறகு நான் தரிசனத்தை பார்க்கும்போது நான் எதை காண்கிறேனோ அதையே கூறுகிறேன். அதன் பிறகு அது யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பாருங்கள் எல்லோரும் ஆயத்தமா? இப்போது மேலே சக்கர நாற்காலிகளிலும் மற்றும் மற்ற காரியத்தில் உள்ளவர்கள், நீங்கள் உங்கள் நிலைமைக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணாதீர்கள். அது அப்படியல்ல அதை அப்படியே விசுவாசியுங்கள். 56. எப்படி இருக்கிறீர்கள் சகோதரி? நீங்கள் வியாதிபட்டவர் அப்படி தானே? சகோதரி நாம் ஒருவருக்கொருவர் அந்நியராக இருக்கிறோம் என்று நம்புகிறேன். உங்களை நான் இதுவரை பார்த்ததில்லை என்று நான் நம்புகிறேன். அப்படியிருந்தால் உங்களை நான் இனம் கண்டுகொள்ளவில்லை. மிச்சிகனில் உள்ள பிளிண்ட் என்ற இடத்தில் ஒருவேளை நீங்கள் என்னை பார்த்திருக்கக் கூடும். அந்த கூட்டத்தில் நீங்கள் இருந்தீர்களா? கூட்டத்திற்குள்ளாக உங்களால் வர முடியவில்லை என்று நினைக்கிறேன். பிளிண்ட் கூட்டம் எனக்கு நினைவுள்ளது. அது ஒரு அருமையான கூட்டமாக இருந்தது. இப்போது திருவாளர் பாக்ஸ்டர்... பாருங்கள் அபிஷேகம் கீழே வரும்போது... மற்றும் அது வந்தபிறகு சில நேரத்தில் என் குரல்... பாருங்கள் அவர்களுக்கு அது தேவையாக உள்ளது. ஏனெனில் கூட்டத்தினர் கேட்க வேண்டும் என்பதற்காக பாருங்கள்,இப்போது அவர்களுக்கு சரியாக கேட்கிறதா என்று பார்ப்போம். பின்னால் இருப்பவர்களுக்கு சரியாக கேட்கிறதா? சரியாக உங்களுக்கு கேட்கிறதா? சரி. 57. இப்போது சரி உங்களிடத்தில் எதுவும் நான் பேசவில்லை அல்லது வேறு எதுவும் சொல்லவில்லை உங்களை குறித்து ஒன்றும் எனக்கு தெரியாது. பாருங்கள், அந்த இரவு கூட்டத்தில் நீங்கள் இருந்தீர்கள், அவ்வளவுதான் பிளிண்ட் கூட்டம். மேலும் முதல் இரவு கூட்டத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்று எண்ணுகிறேன். அதில் எட்டாயிரம் பேர் இருந்தார்கள். அல்லது ஏறக்குறைய எட்டாயிரத்து ஐந்நூறு பேர் இருந்தார்கள் என்று எண்ணுகிறேன். (அங்கு வேகமாக ஜெப வரிசை அவள் நடத்தப்பட்டாள் என்று அந்த சகோதரி கூறுகிறார்கள்) ஓ, நீங்கள் துரிதமான ஒரு ஜெப வரிசையில் சென்றீர்கள். நல்லது ஒருவேளை. நான் அதை நீண்ட காலமாக நிறுத்திவிட்டேன்... இல்லை அம்மா இப்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் அறியாததால் அந்நியர்களாக இருக்கிறோம். பாருங்கள்... தேவன் முன்னால் என் கரத்தை வைத்து நான் சொல்லுகிறேன், உங்களை எப்பொழுதும் நான் பார்த்ததாக எனக்கு நினைவே இல்லை. மற்றும் அதற்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் என் தலையை தாழ்த்தி நிற்கையில் வரிசையில் வந்த மக்கள் வேகமாக கடந்து செல்வார்கள். நூற்றுக்கும் மேலான மக்கள் கடந்து போவதினால் என்னால் அவர்களை பார்த்திருக்க முடியாது. இப்போது ஏதோ ஒரு பிரச்சனை உங்களுக்கு இருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் இங்கு வந்து இருக்கமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒரு குறைகூறுபவர் அல்ல. ஒரு கிறிஸ்தவள் நீங்கள் ஒரு கிறிஸ்தவர். நீங்கள் முன்னாக நடந்து வந்தபோது மற்றும் நான் திரும்பியபோது ஆவியானவரே சாட்சியிடுவதை நான் உணர்ந்தேன். இப்போது சரியாக உங்களுக்குள் ஏதோ ஒரு காரியம் நடைபெறுகிறது அல்லவா? ஏதோ ஒரு மிகவும் வித்தியாசமான உணர்வு உங்களுக்குள் ஏற்பட்டால், அது உண்மை என்றால் கூட்டத்தினருக்கு சாட்சியாக உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இப்போது அவளுடைய விசுவாசம் அசைகிறது, ஆவியானவர் என் மேல் வருகிறார். புரிகிறதா? 58. இப்போது உங்களைக் குறித்து ஏதாவது அறிந்திருப்பேனென்றால் அது இயற்கைக்கு மேன்பட்டவரிடத்திலிருந்து வரவேண்டும். உங்களை எனக்கு தெரியாது. எதுவுமே உங்களைப் பற்றி தெரியாது; மற்றும் அந்த காரியம் தெரிந்தாக வேண்டும். இப்போது நீங்கள் இங்கு வந்து இருக்கிறீர்கள் மற்றும் உங்களை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அறிந்திருக்கிறீர்கள் இயற்கைக்கு மேன்பட்ட ஏதோ ஒரு அசைவு இங்கு இருக்கிறது என்பதற்கு நீங்கள் சாட்சியுடையவர்களாக இருக்கிறீர்கள். மற்றும் நீங்கள் உணரும் உணர்வு ஒரு அன்பான வரவேற்ப்பாக இருக்கிறது. அது சரிதானே? பாருங்கள் பிரசங்கிக்கும்போது நீங்கள் அபிஷேகத்தை பெற்று பின் சந்தோஷம் அடைந்தீர்கள். ஆனால் இது அதைவிட அதிகமான ஒரு நிலையான உணர்வாக இருக்கிறது. புரிந்ததா? அந்த உணர்வு இப்பொழுது நம் மத்தியில் முன்னும் பின்னுமாக செல்கிறது. மேலும் இப்போது உங்களைக் குறித்து ஏதாவது அறிய வேண்டுமென்றால் அது என்னால் முடியும், ஆனால் அது இயற்கைக்கு மேம்பட்டவரிடத்தில் இருந்து வரவேண்டும். மற்றும் அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் என்ன சொல்லுகிறேனோ அது அப்படியாகவே விசுவாசியுங்கள். அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவி... ஆமாம் அம்மா அந்த காரணத்திற்காக தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். ஆம் அம்மா நீங்கள் கண்ணாடி போட்டு இருப்பதை நான் காண்கிறேன் அது உங்கள் கண்களுக்கு சம்பந்தமானது. ஆனால் வேறு ஒரு காரியமாக இருக்கக்கூடும். என்னிடத்தில் நீங்கள் எந்த காரியமும் சொல்லவேண்டாம். நான் அப்படியாகவே நான் உங்களை பார்த்தால் போதும். 59. இப்போது இந்த அர்த்தத்தில் சொல்லவில்லை... உங்களுக்கு தெரியுமா எலியா (எலிசா) தீர்க்கதரிசி சொன்னார், "யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மை பார்க்கவுமாட்டேன்", புரிகிறதா? வேறு வார்த்தையில் சொல்லப் போனால், இது பார்ப்பதற்கு எப்படியிருக்கிறதென்றால் அது ஆவிகுரிய சம்பந்தமாக அங்கு என்ன தவறு என்ன இருக்கிறது என்று அதை சுட்டிக்காட்டுகிறது என்று அர்த்தமாகும். இப்போது கர்த்தராகிய இயேசு அவர் அருமையானவராக இருக்கிறார் அல்லவா? நிச்சயமாக இருக்கிறார். நீங்கள் கிறிஸ்தவர் மற்றும் தேவனின் வார்த்தையை விசுவாசிக்கிறீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால்...ஆம் அம்மா நீங்கள் சூழ்நிலை காரணமாக பாதிக்கப் பட்டவர்களாயிருக்கிறீர்கள். அநேக காரியங்கள் உங்களுக்கு பிரச்சனையாக உள்ளது. அது சரி தானே. ஒன்று உங்களுக்கு பித்தப்பையில் கல் உள்ளது. அது சரிதானே? மற்றும் உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளது. அது சரி தானே? நீங்கள் அவதிக்குள்ளாக இருக்கிறீர்கள்... அது என்னவென்று பார்ப்போம்... ஓ, அது நீரழிவு வியாதி? அப்படித் தானே? உங்களுக்கு நீரழிவு உள்ளது. நீங்கள் பதட்டத்தோடு இருக்கிறீர்கள். அப்படித்தானே? நீங்கள் அதிகமான பதட்டத்தினால் இருக்கிறீர்கள். அதனால் உங்கள் ஜீவியமும் உங்களுக்கு இனிமையாக இல்லை. ஒரு கயிறு போல் தெரிகிறது. ஆம், ஒரு கருமையான பெரிய கயிறு. சொல்லப்பட்டதெல்லாம் உண்மை தானா? அது உண்மை தான். சரி அதை சொன்னது நான் அல்ல என் குரல் எனக்கு கேட்டது. ஆனால் எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு அதிகமான ஜெபம் ஏறெடுக்கப்பட்டது என்று நான் உங்களை காண்கிறேன். வெவ்வேறு நேரங்களில் உங்களுக்காக அநேக ஜெபம் செய்யப்பட்டுள்ளது. அது சரி தானே? உங்கள் முன்னாள் ஒரு தரிசனத்தை கண்டேன். இப்போது அவருடைய தீர்க்கதரிசியாக என்னை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன்) சரி வீட்டிற்க்கு செல்லுங்கள். நீங்கள் சுகமடைந்தீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை சொஸ்தமாக்கினார். சகோதரியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே சரி. 60. எல்லோரும் மிகவும் பயபக்தியுடன் இருங்கள். சரி மகனே, அந்த மனிதனை கொண்டு வரலாம். எப்படி இருக்கிறீர்கள் ஐயா? நம்முடைய எஜமான் அருமையானவராக இருக்கிறார் அல்லவா? ஒ, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், அவர் இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியாது. என்னுடைய ஜீவனும், என் சந்தோஷம் மற்றும் எனக்கு உண்டான எல்லாமே அவர்தான். மற்றும் நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். அது ஒரு வரவேற்பு தரும் ஆவியாக இருக்கிறது. நீங்கள் ஒரு குறை கூறுபவர் அல்ல. ஒரு கிறிஸ்தவர் என்று எனக்கு எப்படி தெரியும். நாத்தான்வேல் ஒரு நல்ல மனிதன் மற்றும் உண்மையுள்ள மனிதன் என்று அறிந்த அதே ஆவியானவர் தான், மற்றும் இயேசு நாத்தான்வேலிடத்தில்... அல்லது நாத்தான்வேல் இயேசுவிடத்தில் சொன்னார். அவர் சொன்னார், "இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்”, என்றார். அதற்கு நாத்தான்வேல் வியப்படைந்து கேட்டான், "ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்”, என்றார். அது சரிதானே? இப்போது முதல் காரியமாக உங்களுக்கு சொல்லப்பட்டது நீங்கள் கிறிஸ்தவர். அது சரிதானே நீங்கள் ஒரு விசுவாசி மற்றும் இருதய பிரச்சனையால் அவதிக்குள்ளாக இருக்கிறீர். அது சரிதானே? நீங்கள் வீட்டிற்கு செல்லலாம். நீங்கள் சுகம் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். என் சகோதரனே இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கினார். மற்றும் தேவன் உங்களை ஆசீர்வதித்து சுகமாக்குவாராக. எல்லோரும் இவ்வாறு சொல்லலாம், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்: முதல் இரண்டு நபருக்கு நான் ஜெபிக்கவே இல்லை, அவர்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே அவர்களுடைய விசுவாசமே அவர்களுக்கு சுகத்தை கொடுத்தது”பாருங்கள். நீங்கள் சொல்லலாம் சகோதரர் பிரான்ஹாம் அதை எப்படி உங்களால் உணர முடிகிறது. நான் வியாதிபட்டவரிடத்தில் பேசும்பொழுதே நான் மிகவும் பெலவீனமாகிறேன். கர்த்தரின் ஆசீர்வாதம் அவர்களிடத்தில் சென்று அவர்களை சுகப்படுத்தியது என்று நான் அறிந்துக் கொள்கிறேன். சரி, இப்போது விசுவாசம் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். எப்படி இருக்கிறீர்கள் சகோதரியே? இப்பொழுது நம்முடைய எஜமான் அருமையானவராக இருக்கிறார் அல்லவா? பாருங்கள், இப்போது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு இந்த நிமிடம் வரை தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விசுவாசி மற்றும் ஏதோ ஒரு காரியம், கூட்டத்தினர் மத்தியில் ஏதோ ஒன்று புறப்பட்டு அதே வழியில் என்னை இழுக்கிறது. இப்பொழுது அது ஒரு இணைந்த ஆவியாக இருக்கிறது. நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிற அதே காரியம்தான் ஏதோவொன்றை போல் அசைவாடுகிறது. பாருங்கள், இந்த ஆவிகள் இணைந்த ஆவிகள். (ஆவிக்குரிய சம்பந்தமான) நீங்கள் இவ்வாறு கேள்விப்பட்டதை போல் ஒரே சிறகுள்ள பறவைகள் பாருங்கள் அவைகள் ஒன்றாக போகும். மேலும் பிசாசின் வல்லமை, பிசாசியல், அந்த முறையில் செயல்படுகிறது. நீங்கள் இங்கு நின்று கொண்டு இருக்கிறீர்கள்... நீங்கள் என்னுடைய சகோதரி நீங்கள் அவதிக்குள்ளாக இருக்கிறீர்கள். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் அல்லவா? அப்படித் தானே? 61. ஒரு நிமிடம், உங்களிடம் உள்ள அதே காரியம் இங்கு அமர்ந்து இருப்பவர்களில் யாரோ ஒருவருக்கு உள்ளது. மற்றும் அது என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது... ஒரு நிமிடம் இந்த பக்கமாக திரும்புங்கள். இல்லை இந்த பக்கம் திரும்புங்கள். அப்படியே திரும்பி என்னை நோக்கி வாருங்கள். ஒரு நிமிடம் உங்களிடத்தில் நான் பேச விரும்புகிறேன். அந்த காரியத்திற்காக மறுபடியுமாக நான் போக இருப்பதினால் ஒரு நிமிடம் நான் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். (உங்களுக்கு புரிந்ததா?), ஏனெனில் அது என்னை தொல்லைப் படுத்துகிறது. அது என்னவென்று என்னால் காணமுடியவில்லை. அது இழுக்கிறது அதற்கு இணையான ஒரு ஆவி. இது தான் காரியம். நீங்கள் ஒரு மனிதன். நானும் ஒரு மனிதன், மற்றும் நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆவிக்குள் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறோம். இப்பொழுது இது இங்கு விசுவாசிப்பதற்காக என்னிடம் வந்தது. மற்றும் நீங்கள் அவதிப்படுகிறீர்கள். உங்களுக்குள் ஒரு வியாதியின் ஆவி உள்ளது. அது என்னவாக இருந்தாலும் அது அதற்கு தெரியும், உங்களை நான் விசுவாசிக்க செய்துவிட்டால், அது உங்களை விட்டு போகவேண்டும். (உங்களுக்கு புரிகிறதா) அதனால் தான் அது யுத்தம் செய்கிறது. அது தான் அந்த இழுப்பாக இருக்கிறது. மற்றும் அதற்கு உதவியாக அதே வழியில் இழுக்கும் ணையான ஒரு ஆவியாக அது உள்ளது. பாருங்கள், நீங்கள் ஏற்கனவே குணமாகிவிட்டதால் அவன் அதை அறிந்ததினால் அவன் கலக்கமடைகிறான். உங்களுக்கு பெண்களுக்கு உரிய பிரச்சனை இருந்தது அப்படி தானே? நீங்கள் சுகமடைந்தீர்கள் அது சரிதான்... ஆம் உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது சகோதரியே. 62. அந்த முனையில் உட்கார்ந்திருக்கும் சீமாட்டியே சற்று நேரத்திற்கு முன் நீங்கள் அமர்ந்து இருந்தபோது உங்களுக்கு பெண்களுக்கு உரிய பிரச்சனை இருந்தது அல்லவா? ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்கள். சகோதரியே நீங்களும் சுகமடைந்தீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக... சரி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது நீங்கள் சொல்லலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே நீங்கள் நலமாக இருக்கப் போகிறீர்கள்.. அந்த ஸ்திரீக்கு கருப்பையில் கட்டி இருந்தது. இப்போது எல்லோரும் மிகவும் பயபக்தியோடு இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். தேவன் அதை நிறைவேற்ற செய்வார். (டேப்பில் காலியிடம்) அந்த ஸ்திரீயிடத்தில் பேசிகொண்டு இருந்தபோது உங்களுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு இருந்தது அல்லவா? அப்படி தானே? சீமாட்டியே பாருங்கள். அது தான் காரியமாக இருக்கிறது. அது வருகிறது, அது எங்கு இருக்கிறது என்று என்னால் காண முடியவில்லை. மேலும் நான் வெளிச்சத்தை பார்க்கிறேன், கர்த்தரின் தூதனானவர் அந்த ஸ்திரீயின் மேல் இருக்கிறார்.நான் அவளிடத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது சரியாக அப்பொழுதுதான் இவ்வண்ணமாக அது அவள் மேல் வந்து இறங்கியது. மற்றும் நான் உங்களிடத்தில் பேசிய அந்த நேரத்திலேயே, ஒரு அன்பான வரவேற்கும் உணர்வு உங்களை தொட்டது. அது சரிதானே? அப்படி இருக்குமானால் எழுந்து நில்லுங்கள். அப்பொழுது மக்கள் நான் சொல்லுவது சத்தியம் என்று நம்புவார்கள். அது சரிதானே... இப்போது கர்த்தரின் தூதனானவர் உங்களை ஆசீர்வதிப்பார். மற்றும் இப்பொழுதே நீங்கள் சொஸ்தமானீர்கள். நீங்கள் நலமாக இருக்க முடியும். 63. சரி அந்த சீமாட்டியை இங்கு கொண்டு வாருங்கள். சரி இப்போது எல்லோரும் பயபக்தியோடு இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். தேவன் அதை நிறைவேற செய்வார். எப்படி இருக்கிறீர்கள் சீமாட்டியே, நான் மன்னிக்க விரும்புகிறேன். நீங்கள் ஜெபத்திற்கு வருவதாக சகோதரர் பாஸ்வர்த் எனக்கு கடிதம் எழுதி மற்றும் எனக்கு தெரிவித்த அந்த சீமாட்டி நீங்கள் தானே... எப்போது எழுதினார், அதை ஓ, சகோதரர் பாஸ்வர்த் ஒரு வியாதியஸ்தரை அனுப்புவதாக கடிதத்தில் சொன்ன அந்த நோயாளி நீங்கள் தானா? நீங்கள்... எங்கிருந்து வருகிறீர்கள்? பிளோரிடாவா? ஜோலியட் இல்லினாய்ஸ் (சகோதரி ? சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்). பாருங்கள் சகோதரியே, அது எனக்கு ஒரு இரகசியமும் கிடையாது. இல்லை பாருங்கள், உங்களுடைய பிரச்சனைகளில் ஒன்றை நான் புரிந்து கொண்டேன் மற்றும் எனக்கு அது தெரிகிறது. உங்கள் முழு இருதயத்தோடு நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள் நீங்கள் முயற்சி செய்து, முயற்சி செய்து கொண்டு இருந்தீர்கள். உங்கள் ஜீவியம் உங்களுக்கு திருப்தியாக இல்லை, தேவனுடன் செல்ல வேண்டுமென்றும், அவரோடு நெருங்கி நடக்க வேண்டுமென்று விரும்பினீர்கள். நீங்கள் வாலிப மகளாக இருந்தபோது உங்களுக்கு ஒரு அழைப்பு அல்லது தேவனுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று உணர்ந்தீர்கள். அது தேவனிடத்தில் இருந்த அழைப்பாக இருந்தது. அதை நீங்கள் ஒருபோதும் நிறைவேற்றவில்லை. தேவன் என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்கு சொன்னாரோ அதை நீங்கள் ஒருபோதும் செய்யவில்லை. இந்த இரவுபொழுதில் உங்களை முழுவதுமாக தேவனுக்கு சரணாகதியாக ஒப்புக் கொடுப்பீர்களென்றால் தேவன் உங்களுக்கு சுகம் அளிப்பார். உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். 64. பாருங்கள் சகோதரியே நீங்கள் எதுவும் என்னிடத்தில் சொல்லாதீர்கள். உங்களுக்கு புற்று நோய் உள்ளது. அது தான் உங்களுக்கு உள்ளது, கட்சிதமாக அதுதான் உங்களுடைய பிரச்சனையாக இருக்கிறது. உங்களுக்கு புற்று நோய் உள்ளது இப்போது அது தான் உங்களுக்கு வலியாக இருக்கிறது. முடிவு எடுப்பதற்கு உங்களுக்கு அதிக காலம் இல்லை. உங்கள் மீதியாக உள்ள நாட்கள் உங்கள் முழு இருதயத்தோடு அவருக்காக சேவை செய்ய வேண்டும் என்று இந்த இரவு பொழுதில் இயேசு கிறிஸ்துவிற்காக நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை ஏற்று கொள்ளுவீர்களா? நான் சொல்லியது உங்களுக்கு உண்மை என்று தெரியும். பாருங்கள் உங்களுக்கு அந்த காரியம் தெரியும். பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளவேண்டும் மற்றும் மீதம் உள்ள நாட்களில் அவருக்காக ஜீவிக்க வேண்டும். மற்றும் அவருடைய வேலைக்காரியாக இருக்க வேண்டும். அதை நீங்கள் விசுவாசிப்பீர்களென்றால் மற்றும் பயபக்தியோடு அதை விசுவாசித்து இங்கு இருந்து நீங்கள் சென்று நான் சொல்வதைபோல் செய்வீர்களென்றால் நீங்கள் சுகமடைவீர்கள். உங்கள் முழு இருதயத்தோடு நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆம், ஆம் அம்மா. உங்கள் சிந்தையில் தொல்லைக்குள்ளாக இருக்கிறீர்கள். ஆனால் அந்த காரியம் அல்ல நான் சொல்ல முயற்சிக்கும் காரியம் அதுவல்ல. புரிகிறதா? அது என்னவென்றால்... முதலாவது காரியம் அது தேவன் முதலில் இருக்க வேண்டும், தேவனை முதலாவது நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். பாருங்கள் சரி இப்போது உங்கள் தலையை தாழ்த்துங்கள். பரலோகப் பிதாவே இந்த ஸ்திரீயின் மேல் இரக்கமாக இருங்கள். தேவனே அவள் முன்னால் நான் நிற்கையில் அவள் மீது இரக்கமாக இருக்கும்படி நான் ஜெபிக்கிறேன். இந்த ஸ்திரீயின் மேல் என் கரத்தை வைக்கையில் ஏதோவொரு காரியம் நடக்கவில்லையென்றால் அவர்கள் அதிகமான நேரம் இருக்க முடியாது என்பதை நான் உணர்கிறேன்... தேவனே நான் உங்களிடத்தில் ஜெபிக்கிறேன்... இப்போது அவள் என்ன செய்யவேண்டும் என்று கூறப்பட்டது. அவள் இங்கு இருந்து இந்த இரவுப்பொழுதில் கடந்து செல்கையில் ஒரு சந்தோஷ நிலையோடு செல்லும்படியாக மற்றும் உங்களிடத்தில் அவளை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்து பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை பெற்று கொள்ளும்படியும் மற்றும் அவள் ஜீவியத்தில் தேவனின் வல்லமையை பெற்றுக்கொள்ளும்படி அருளும் கர்த்தாவே. மேலும் நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே நீங்கள் அவளை அழைத்து மற்றும் சொஸ்தமாக்கி செல்லும்படி செய்வீர்கள். அவள் மீது கரத்தை வைக்கையில் இந்த ஆசீர்வாதங்களை அருளும்படியாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது செல்லுங்கள் சரி. நாம் எல்லோரும் இவ்வாறு சொல்லலாம் கர்த்தருக்கு நன்றி. சரி. 65. சரி வாருங்கள் சீமாட்டியே எல்லோரும் சிரத்தையாக இருங்கள். இப்போது அடுத்து நடப்பது அந்த ஸ்திரீக்குள்ளாக இருக்கிறது. அது அவள் தான் செய்ய வேண்டும் இல்லையெனில் அவள் சுகமடையமாட்டாள். சரி சிரத்தையாக இருங்கள். எப்படி இருக்கிறீர்கள் சகோதரியே? நீங்கள் கண்ணாடி போட்டிருப்பதை நான் காண்கிறேன். ஏதோ ஒரு காரியம் உங்கள் கண்களுக்கு உள்ளது. மக்களால் அதை காணமுடிகிறது பாருங்கள், காரியம் என்னவென்றால் ஏதோ ஒரு காரியம் மறைமுகமாக இருக்குமானால் மக்களால் அதை காணமுடியாது. உங்கள் கண்களை தவிர நீங்கள் பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியமுள்ள நபராக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பதால் ஆயினும் நீங்கள் ஒரு உண்மையுள்ள விசுவாசி. அது சரி தான். அசலான உண்மையான விசுவாசம் மற்றும் அவர் ஆவியில் நிரம்பிய ஒரு கிறிஸ்தவள் உங்கள் கண்கள் (அஸ்மாகட்டிசம்) என்று ஒன்றால் (அஸ்மாகடிஸி) ஆனது அது வெகு நாளாக உள்ளது மற்றும் உங்கள் பின் பகுதியில் பிரச்சனை உள்ளது. அது சரி தானே, அது இருந்தது. இயேசு கிறிஸ்து உங்களை முழுவதுமாக சுகமடையச் செய்தார் சகோதரியே, இந்த மேடையை விட்டு நீங்கள் சுகத்தோடு செல்லலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக களிகூறுதலுடன் சென்று சந்தோஷமாக இருங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று எல்லோரும் சொல்லலாம். உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள் தேவன் அதை நிறைவேற செய்வார். சரி எல்லோரும் பயபக்தியோடு இருங்கள். 66. மாலை வணக்கம் சகோதரியே, நம்முடைய எஜமான் அன்பானவர் அல்லவா? என் முழு இருதயத்தோடு நான் அவரை நேசிக்கிறேன். நீங்களும் அவ்வாறு செய்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்... இப்போது நீங்கள் உணர்கிற ஆவி அது அவருடைய ஆவி என்று விசுவாசிக்கிறீர்களா? அது அவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நீங்களும் நானும் அந்நியர்களாக இருக்கிறோம் அல்லவா? சகோதரியே நாம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை மற்றும் உங்களை குறித்து நான் ஏதாவது அறிந்திருந்தால் அது இயேசுவிடத்தில்... உங்களுடைய ஆவியுடன் நான் தொடர்பு கொள்வேன். உங்களுடன் நான் பேசுகிறேன் அதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இந்த ஒலிபெருக்கி வேலை செய்கிறது பாருங்கள், உங்களுடைய ஆவியுடன் நான் முதலாவதாக தொடர்பு கொண்டால் மட்டுமே உங்கள் ஜீவியத்தில் நடந்த காரியத்தை என்னால் காண முடியும். பாருங்கள், அது கூட்டத்தினருக்கு தேவையில்லாத ஒரு காரியம் நான் உங்களிடத்தில் வெறுமனே பேசுகிறேன் அது வெறும் உங்களிடத்தில் ஒரு தொடர்பு கொள்ளவே. 67. ஆம் அம்மா நான் சத்தியத்தை சொன்னேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் இட்ட அறிக்கை அது சத்தியம் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படி தானே சகோதரியே, ரொம்ப காலமாக நீங்கள் வியாதியில் பாதிக்கப்பட்டவராக இருக்கிறீர்கள் அல்லவா? சகோதரியே ஸ்திரீகளுக்கு உண்டான பிரச்சனையில் ரொம்ப நாட்களாக அவதிக்குள்ளாக இருக்கிறீர்கள் மற்றும் இருதய பிரச்சனை உள்ளது. அது சரிதானே? உங்கள் இருதயத்தை அழுத்திக் கொண்டிருக்கிறது. அது உண்மை தானே? மற்றும் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்... நீங்கள் ஜெபிக்கப்பட்டபோது... சமீபமாக நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். இங்கு மற்றும் இவ்வாறு நினைத்தீர்கள் இப்போது இருக்கும் இடத்தில் நான் போவேனென்றால் மற்றும் நான் சுகமடைவேன் என்று கேட்பேனென்றால் அது சரிதானே? அப்படியாக தான் நீங்கள் ஜெபித்தீர்கள். அந்த நாளில் உங்கள் நாற்காலி பக்கத்தில் முட்டிப்போட்டு ஜெபித்தது எனக்கு எப்படி தெரிந்திருக்கும். இங்கு வாருங்கள். சர்வ வல்ல தேவனே ஜீவனின் ஆக்கியோனே மற்றும் ஒவ்வொரு ஈவையும் கொடுப்பவரே இந்த சிறிய ஸ்திரீ மீது என் கரத்தை நான் வைக்கும்போது நீங்கள் உங்கள் வார்த்தையில் சொல்லியிருக்கிறீர்கள் என்னை விசுவாசிப்பவர்கள் மீது இந்த அடையாளம் தொடரும் வியாதியஸ்தர்கள் மீது கரம் வைக்கும் போது அவர்கள் சுகமடைவார்கள் தேவனே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளுக்கு சுகத்தை அருளும். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே களிகூர்ந்து சந்தோசத்தோடு சுகத்தை பெற்று கொண்டு செல்லுங்கள். எல்லோரும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுவோம். 68. சரி விருப்பப்பட்டால் அந்த சீமாட்டியை கொண்டு வாருங்கள். வாருங்கள் சகோதரியே மாலை வணக்கம். டோலிடோவில் ஒரு வெதுவெதுப்பான சூழ்நிலை உள்ள ஒரு இரவை கொண்டு இருக்கிறோம். ஆம் அப்படி இருக்கிறது. அம்மா அவரை நேசிக்கிறீர்கள் அல்லவா? அவர் அருமையானவராக இருக்கிறார் என்று எண்ணுகிறீர்கள் அல்லவா? எஜமான் அந்த ஸ்திரீயிடத்தில், "எனக்கு குடிப்பதற்கு கொண்டு வா", என்று சொல்லுவதை போல் நானும் இவ்வார்த்தைகளை சொல்லுகிறேன். ஏன் அவரால் பருகுவதற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியாதா என்ன? அவள் அதற்கு சொன்னாள் சமாரியாவிடத்தில் யூதர்கள் ஏதாவது கேட்பது பழக்கம் அல்ல. அவளுடைய தயவு... அதற்கு அவர் சொன்னார், "நீ தேவனுடைய ஈவையும் தாகத்துக்குத் தா", என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால் நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண் டாகாது. வேறு ஒரு வார்த்தையில், அவர் அவளுடைய ஜீவியத்தை ஆராய்ந்து, அவளுக்குள் என்ன பிரச்சனை இருக்கிறது என்று பார்க்கும் முயற்சியில் அவர் அவளுடன் பேசிக் கொண்டிருந்தார். மற்றும் பிதா அவருக்கு காண்பித்தார், அவளுடைய பிரச்சனை என்னவென்று கட்சிதமாக காண்பித்தார் மற்றும் அது சரி செய்யப்பட்டது. அது சரி தானே? 69. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் மற்றும் அவர் தான் இவர் என்று நான் சொன்ன சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம் அம்மா உங்கள் எண்ணங்களை நான் பகுத்தறியவில்லை. இது தேவனின் பரிசுத்த ஆவியானவர். அநேக தொல்லைகளுக்குள்ளாக நீங்கள் இருக்கிறீர்கள். தொல்லை நிறைந்த ஜீவிய பாதையில் நீங்கள் போவதையும் மற்றும் உங்கள் பின்னாக ஒரு இருள் தொடர்வதையும் நான் காண்கிறேன். அது சரிதானே?. அது அப்படிதானே, நான் பார்க்கிறேன்... ஆம், உங்களுக்கு நரம்புத்தளர்ச்சி பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது, அதுவும் அது மத்திய வேளையில் உங்கள் பெலன் எல்லாம் விட்டுப் போவதாக இருந்ததை நான் பார்க்கிறேன். ஒரு நாற்காலியில் அமர்ந்தீர்கள். உங்களை சுற்றி இருளாக இருந்தது. அப்படி தானே? ஓ, ஆம் உங்களுக்கு காசநோய் இருந்ததையும் நான் காண்கிறேன். ஆம், உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு காசநோய் உள்ளது. அது சரிதானே? இந்த காரியங்களை குறித்து நீங்கள் பிற்காலங்களில் யோசிக்கவில்லை. உங்களுக்கு சொல்லப்படும் இந்த காரியங்கள் இப்போது மனோதத்துவமாக இருக்க முடியாது அல்லவா சகோதரியே? இது சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை. இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கு வாருங்கள் சதோதரியே. ஓ, அன்புள்ள இயேசுவே இங்கு நீங்கள் இருக்கிறீர்கள். அதே அருமையானவராக பதினாயிரங்களில் சிறந்தவராக தீர்க்கதரிசி சொன்னதை போல் பள்ளத்தாக்கின் லீலியை போல் விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறீர். அநேக வருடங்களாக இந்த பாதிப்பினால் இங்கிருக்கும் இந்த சிறிய தாயாரை நான் காண்கிறேன், அன்பான தேவனே, மற்றும் அவள் இருதயத்தில் இருக்கும் இரகசியத்தை வெளிப்படுத்தி பேச தொடங்கும் போது நீங்கள் அவளை தொட்டதை நான் உணர்ந்தேன். மேலும் உங்கள் வார்த்தையின் நினைவுகூறுதலாக என் கரத்தை அவள் மேல் இப்பொழுது வைக்கிறேன். மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவள் ஜீவிய முழுவதும் ஆரோக்கியத்தோடும் நலத்தோடும் இருக்கட்டும். 70. இந்த பக்கமாக பாருங்கள் பிரியமுள்ளவரே. ஒரு நிமிடம் இந்த பக்கமாக பாருங்கள். உங்களிடத்தில் ஒன்றை கேட்கிறேன். எனக்கு தெரிந்தவரை என் ஜீவியத்தில் உங்களை நான் பார்த்ததில்லை. நாம் இருவரும் அந்நியர்கள். உங்கள் ஜீவியத்தில் ஏதாவது இருக்குமானால், எதுவாக இருந்தாலும்... என்னால் மறுபடியுமாக சொல்ல முடியவில்லை. ஏதோவொன்றை நான் உங்களிடத்தில் சொன்னதை நீங்கள் கேட்கிறீர்கள் அல்லவா? அது என்னுடைய குரல். ஆனால் அதை இயக்குவது நான் அல்ல. அது ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன். மேலும் நான் உங்களிடம் பேசிக் கொண்டு இருக்கையில் ஏதோ ஒரு காரியம் நிகழுவது போல் நீங்கள் உணர்ந்ததில் சந்தேகம் இல்லை. அது சரிதானே? மற்றும் அது சத்தியத்தை சொல்லியதா? அது சத்தியம் தானே? இப்போது சரி அது உண்மையை சொல்லுமானால்... மறுபடியுமாக அதை நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா. அப்படி தானே? அது அதே ஆவியானவர். உங்களிடத்தில் நான் பேசும்படியாக அவர் விரும்புகிறதை நான் உணர்கிறேன். ஆம் அம்மா, உங்கள் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்று நான் அறியும்படியாக தேவன் செய்யக் கூடும் என்றால், உங்களுக்குள் என்ன இருக்கிறதென்று நான் அறியும்படி அவர் செய்வார் மற்றும் அது உண்மை என்று உங்களுக்கு தெரியும். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் காச நோயில் இருந்து சுகமடைந்தீர்கள். நீங்கள் நலமாக வீட்டிற்கு செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே இப்போது நீங்கள் ஆரோக்கியமுள்ளவளாக இருக்கப் போகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அவருடைய நன்மைக்கும் மற்றும் இரக்கத்திற்காக தேவனுக்கு துதி உண்டாவதாக என்று நாம் சொல்லுவோமாக. 71. அங்கு அமர்ந்து இருக்கும் சகோதரியே நலமாக இருப்பது போல் உணர்கிறீர்களா அப்படி இருக்கிறதா? அருமை. இந்த பக்கமாக அது அந்த பக்கமாக நகருவதை நான் உணர்கிறேன், ஆகையால் அவ்வாறே கவனித்துக் கொண்டிருந்தேன். ஆசீர்வாதம் உங்கள் இருவர் மேலும் உள்ளது. அது சரிதான். அது அருமையாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் எதற்காக ஜெபம் பண்ணப்பட்டீர்கள் அது எனக்கு நினைவில்லை. ஆனால் அது எதுவானாலும் நீங்கள் சுகமடைந்தீர்கள் என்று நான் அறிகிறேன். ஆம், ஆமென், தேவன் உங்களோடு இருப்பாராக மற்றும் உங்களுக்கு உதவி செய்வாராக. தலைகளை தாழ்த்தி அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் சீமாட்டியே எதை குறித்து ஜெபிக்கிறீர்கள். நீங்கள் ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? தேவன் என்னை அனுப்பினார் என்றும் மற்றும் நான் சொல்லியது சத்தியம் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவருடைய தீர்க்கதரிசியாக என்னை அனுப்பினார் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? இங்கு இருந்து அங்கு உங்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்று அவர் வெளிப்படுத்துவாரென்றால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? ஒரு நிமிடம் நீங்கள் எழுந்து நில்லுங்கள். இந்த பக்கமாக பார்க்கும்படியாக நான் உங்களை கேட்கிறேன். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஜெபிப்பதை நான் கவனித்தேன். அது என் கவனத்தை இழுத்தது. உங்களை எனக்கு தெரியாது. என்னை பொறுத்தவரை நாம் அந்நியர்களாக இருக்கிறோம். நாம் அந்நியர்களாக இருக்கிறோமல்லவா? ஆம், ஆம் அம்மா. இது உங்களுக்கு அதிர்ச்சியூட்ட போகிறது சீமாட்டியே, ஏனெனில் அது என்னவென்று உங்களுக்கு தெரியாது என்று நான் எண்ணுகிறேன். உங்களுக்கு புற்று நோய் உள்ளது மற்றும் ஒரு நிமிடம் பொறுங்கள். உங்களுக்குள் இரண்டு கட்டிகள் உள்ளது, அது உங்களுக்குள் இருக்கிறதா? அது உங்கள் வலதுபுறமாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அது சரிதானே? இரண்டு வளர்ச்சி ஒன்று வலதுபுறத்தில். ஆம் ஐயா, அப்படித்தான் நான் நினைக்கிறேன். சரி அவருடைய தீர்க்கதரிசி நான் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். மற்றும் இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். சகோதரியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள். 72. உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த மனிதன் அவர் உங்கள் புருஷனாக இருக்கலாம். உங்களுக்குள் ஒரு இணைப்பை என்னால் காணமுடிகிறது. நன்றியுடன் அவருடைய ஆவி வெளியேறுவதை நான் உணர்கிறேன். அது உங்கள் மனைவியா ஐயா? அது சரிதானா? அது உங்கள் மனைவி. உங்கள் உறவை என்னால் உணரமுடிந்தது. நீங்களும் அவதிக்குள்ளாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு சிதைவு உள்ளது. அது சரிதானே? அது சரியென்றால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி வீட்டிற்கு செல்லுங்கள். மற்றும் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக என் சகோதரனே. விசுவாசம் கொள்ளுங்கள்; உங்கள் முழு இருதயத்தோடு தேவனை விசுவாசியுங்கள். சரி அந்த சீமாட்டியை கொண்டு வாருங்கள். இப்போது விசுவாசம் கொள்ளுங்கள். முன்னே வாருங்கள் சகோதரியே. வாருங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள் சந்தேகம் கொள்ளாதீர்கள். நான் அவருடைய தீர்க்கதரிசி மற்றும் ஊழியக்காரன் என்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக தாயே. ஆம் உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. அப்படித்தானே தாயே? அந்த பழைய இன்சுலின் மற்றும் அந்த காரியம் மிகவும் மோசமாக இருக்கிறது. அந்த ஊசிகளை நீங்கள் போட்டு கொள்ளுவதை நான் காண்கிறேன். இப்போது அது சத்தியம் தானே? மற்றும் உங்களுக்கு இருதய பிரச்சனை அதுபோன்ற காரியம் உள்ளது. உங்களுக்கு மூச்சுப்பிடிப்பதையும் உங்கள் கரங்களை அங்கு அடிக்கடி வைப்பதையும் நான் பார்க்கிறேன். உங்களுக்கு மூச்சு திணறல் உள்ளது அப்படித்தானே? உங்கள் எண்ணங்களை நான் வாசிக்கவில்லை, ஆனால் தரிசனத்தை காண்கிறேன். சாலையில் நீங்கள் நடக்கையில் நீங்கள் கவனமாக பார்க்கவேண்டும் அப்படித்தானே? ஆம், நான் உங்களை காண்கிறேன். ஒரு நடைபாதையில் நீங்கள் தாண்டும் போது அதிக நேரம் எடுத்துக் கொண்டதை காணமுடிகிறது. அது சரிதானே? அச்சம்பவம் ஒரு அடையாள பலகை இந்தப் பக்கமாக இருந்த இடத்தில் நடந்தது. அது சரிதானே? தாயே வீட்டிற்கு செல்லுங்கள். மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து முழுவதுமாக சுகமடையுங்கள். 73. நாம் எல்லோரும் நம் முழு இருதயத்தோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லலாம். அவள் இருதயத்தை ஆசீர்வதியுங்கள். நீங்கள் விசுவாசிப்பீர்களா? உங்கள் முழு இருதயத்தோடு, பாருங்கள் மேலும் யாரும் அவிசுவாசிக்காதீர்கள். கர்த்தர் செய்த மகத்தான காரியங்களை நீங்கள் காண போகிறீர்கள். பரிதாபமான ஆத்துமா. சில நிமிடங்களுக்கு முன்பாக இருந்த தாய்மாரே இப்போது நீங்கள் நலமாக உணர்கிறீர்களா, நீங்கள் உணரவில்லையா? ஆம், ஆமென். உங்களுக்கு சொல்லியது சத்தியம் தானே. அப்படி தானே? அதை குறித்து எதுவும் நீங்கள் யோசிக்க வேண்டாம். அது போய்விட்டது. அது சரிதானே. அப்படியானால் அது தேவனிடத்தில் இருந்து வரவேண்டும் என்று உங்களுக்குத் தெரியும், தாயே அது அப்படித்தானே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக நல்லது. ஐயா, அச்சமயத்தில் அது உங்களை தொட்டதை நீங்கள் உணர்ந்தீர்கள், நீங்கள் உணர்ந்தீர்களா? ஆம் சரி, எழும்பி நில்லுங்கள். ஆம் ஐயா; உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? ஐயா அப்படி செய்கிறீர்களா? ஏதோவொரு வகையில் உங்களை நான் தொடர்பு கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறீர்கள் அல்லவா? அதைக் குறித்து நீங்கள் அமர்ந்து யோசனையாக இருந்தீர்கள் அல்லவா? உங்கள் உடம்பு உடைவது போல் அல்லது அது போல் ஒரு பிரச்சனை உங்களுக்கு உள்ளது அல்லவா? அது உங்கள் கரங்களில் உள்ளது அல்லவா? அது உண்மை தானே. அதில் இருந்து நீங்கள் சுகம் அடைய விரும்புகிறீர்கள் அல்லவா? நான் தேவனின் தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவருடைய ஊழியக்காரன், நான் சொல்லுவது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஏதோ ஒரு காரியம் தடையாக நிற்பதை நான் காண்கிறேன். உங்களுக்கு ஒரு பழக்கம் உள்ளது அல்லவா? புகை பிடிக்கிற அல்லது இது போல் ஒரு பழக்கம் உங்களுக்கு உள்ளது அல்லவா? சுருட்டுபிடிக்கிற புகை பழக்கம் உள்ளது அல்லவா ஒரு மூலையில் ஒன்றை உங்கள் கரத்தில் பிடித்து கொண்டு இருப்பதை என்னால் காணமுடிகிறது. அந்த சுருட்டுகளை விட்டுவிடுங்கள் மற்றும் வீட்டிற்கு சென்று சுகமடையுங்கள் சகோதரனே, தேவனிடத்தில் எல்லாவற்றையும் சரி செய்யுங்கள் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்வீர்கள். ஆமென் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 74. உங்கள் முழு இருதயத்தோடு அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது அவரை உங்களுடைய சுகமளிக்கிறவராக ஏற்றுக் கொள்வீர்களா? அவர் இங்கு இருக்கிறார் இந்த மாலைவேளையில் அவரை உங்களுடைய சுகமளிக்கிறவராக ஏற்று கொண்டவரே எழும்பி நில்லுங்கள். உங்கள் கரங்களை உயர்த்தி சொல்லுங்கள், "கர்த்தராகிய யேசுவே நான் உங்களை ஏற்று கொள்கிறேன்",ஓ தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் சுகத்தைக் கொடுக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன்.Content-Length: 0